ஆடிப்பூரம் மனதுக்கேற்ற மணாளனை பெற உதவும்..!

ஆடிப்பூரம் அம்மனின் சிறப்பு நாட்களில் ஒன்றாகும். உமாதேவி அவதரித்த நாள்.

இந்த ஆடிப்பூரம் நாளில் உலக மக்களைக் காக்கும் சக்தியாக அம்பாள் உருவெடுத்த தினம்.

ஸ்ரீஆண்டாள் பிறந்தாள். பூரம் என்பது சுக்கிரனின் நட்சத்திரம். சுக்ரன் களத்திரக்காரகன். அதாவது வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுப்பவர்.

அவர் தனது மனைவியைப் பற்றி ஆண்களுக்கும், திருமண வாழ்க்கையைப் பற்றி பெண்களுக்கும் கூறுகிறார்.

கூடுதலாக, சுக்ரன் மகிழ்ச்சி, அன்பு, பாசம், காதல் மகிழ்ச்சி, பயணம், அழகு, ஆடம்பரமான வாழ்க்கை போன்ற உலகளாவிய இன்பங்களை வழங்குபவர்.

ஒரு நபர் மகிழ்ச்சியை அடைவதற்குரிய மனநிலையை உருவாக்குகிறவர் என்பதால், ​​அவருடைய ஜாதகத்தில் சுக்ரனின் நல்ல யோக அம்சங்கள் இருக்க வேண்டும்.

சுய ஜாதகத்தில் சுக்ரன் வலுப்பெற்றால் 20 வருட தசா காலத்தில் பெரும் ராஜயோக பலன்கள் உண்டாகும்.

சுக்ரன் பலவீனமாக இருந்தால் அல்லது தோஷ கிரகங்கள் சம்பந்தப்பட்டிருந்தால், திருமணம் தடைபடும். மகிழ்ச்சி குறையும். அழகு மங்குகிறது. ஆடம்பர பொருட்கள் சேர்க்கை இருக்காது. பொருட்கள் வருவதில் தடைகளும் தாமதங்களும் ஏற்படும்.

ஜனன ஜாதகத்தில் சுக்கிரன் நீசம் பெற்று அஸ்தமனம் பெற்று வலிமை குறைந்தவர்கள், ஆடிப்பூர நாளில் அம்பிகையை வழிபட்டால் சுக்ர தோஷம் நீங்கி சகல செல்வமும் பெருகும்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலில் ஆண்டாளை ஆடிப்பூரத்தன்று நந்த வனத்துக்கு எழுந்தருள செய்வார்கள்.

அப்போது திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரம் பாடப்படும். அதனால் ஆண்டாள்மனம் குளிர்ந்து இருப்பாள்.

அப்போது ஆண்டாளை வழிபட்டால் பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறும். அன்றைய தினம் ஸ்ரீவில்லிபுத்தூர் செல்ல முடியாத இளம் கன்னிப் பெண்கள் வீட்டில் ஆண்டாள் திருவுருவத்தை வைத்து திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரங்கத்தை மனதை ஒருநிலைப்படுத்தி பாடினால் திருமணத்தடை நீங்கும். மனம் விரும்பிய கணவனை அடையலாம்.

அன்றைய தினம் அம்மனுக்கு வளையல் சாற்றப்படும். இந்த வளையலை பெண் அணிந்தால், அவளுக்கு திருமணம், குழந்தை பாக்கியம், பலவிதமான பாக்கியங்கள் மற்றும் நீங்காத செல்வம் கிடைக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள்.

இதையும் படிக்கலாம் : ஆடி மாதத்தின் சிறப்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *