
ஆரணி சட்டமன்றத் தொகுதி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 67வது தொகுதியாக ஆரணி தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1951 | வி. கே. கண்ணன் | பொது நல கட்சி | 17,761 |
1957 | பி. துரைசாமி ரெட்டியார் | சுயேச்சை | 20,237 |
1962 | கோதண்டராம பாகவதர் | இந்தியத் தேசிய காங்கிரசு | 30,773 |
1967 | எ. சி. நரசிம்மன் | திமுக | 38,038 |
1971 | எ. சி. நரசிம்மன் | திமுக | 37,682 |
1977 | வீ. அர்ச்சுனன் | அதிமுக | 33,925 |
1980 | ஏ. சி. சண்முகம் | அதிமுக | 42,928 |
1984 | எம். சின்னகுழந்தை | அதிமுக | 54,653 |
1989 | எ. சி. தயாளன் | திமுக | 38,558 |
1991 | ஜெய்சன் ஜேக்கப் | அதிமுக | 66,355 |
1996 | ஆர். சிவானந்தம் | திமுக | 63,014 |
2001 | கா. இராமச்சந்திரன் | அதிமுக | 66,371 |
2006 | ஆர். சிவானந்தம் | திமுக | 69,722 |
2011 | ஆர். எம். பாபு முருகவேல் | தேமுதிக | 88,967 |
2016 | சேவூர் ராமச்சந்திரன் | அதிமுக | 94,074 |
2021 | சேவூர் ராமச்சந்திரன் | அதிமுக | 1,02,961 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,32,862 | 1,40,785 | 23 | 2,73,670 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- ஆரணி வட்டம்
ஆரணி நகராட்சி, கண்ணமங்கலம் பேரூராட்சி, ஆரணி வட்டத்தில் உள்ள ஊராட்சிகள்
- செய்யார் வட்டம் (பகுதி)
கடுகனூர், மேல்நகரம்பேடு, மேல்மட்டை, விண்ணமங்கலம், அகத்தேரிப்பட்டு, மாளிகைப்பட்டு, மேல்கொவளைவேடு, வள்ளேரிப்பட்டு, புதுக்கோட்டை, நாவல்பாக்கம், கொருக்கத்தூர், முனுகப்பட்டு, மேல்சீசமங்கலம், திருமணி, மேல்புத்தூர், தேவனாத்தூர் மற்றும் பில்லாந்தி கிராமங்கள்.