
திருப்புகழ் 307 – அலைகடல் நிகராகிய (ஆறு திருப்பதி)
அலைகடல் நிகராகிய விழிகொடு வலைவீசிகள்
அபகட மகபாவிகள் – விரகாலே
அதிவித மதராயத நிதமொழி பலகூறிகள்
அசடரொ டுறவாடிகள் – அநியாயக்
கலைபகர் விலைமாதர்கள் இளைஞர்கள் குடிகேடிகள்
கருதிடு கொடியாருட – னினிதாகக்
கனதன முலைமேல்விழு கபடனை நிருமூடனை
கழலிணை பெறவேயினி – யருள்வாயே
அலைபுனல் தலைசூடிய பசுபதி மகனாகிய
அறுமுக வடிவேஅருள் – குருநாதா
அசுரர்கள் குடியேகெட அமரர்கள் பதியேபெற
அதிரிடும் வடிவேல்விடு – மதிசூரா
தலையய னறியாவொரு சிவகுரு பரனேயென
தரணியி லடியார்கண – நினைவாகா
சகலமு முதலாகிய அறுபதி நிலைமேவிய
தடமயில் தனிலேறிய – பெருமாளே.
திருப்புகழ் 308 – ஈனமிகுத்துள பிறவி (ஆறு திருப்பதி)
ஈனமிகுத் துளபிறவி – யணுகாதே
யானுமுனக் கடிமையென – வகையாக
ஞானஅருட் டனையருளி – வினைதீர
நாணமகற் றியகருணை – புரிவாயே
தானதவத் தினின்மிகுதி – பெறுவோனே
சாரதியுத் தமிதுணைவ – முருகோனே
ஆனதிருப் பதிகமரு – ளிளையோனே
ஆறுதிருப் பதியில்வளர் – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : பழனி திருப்புகழ்..!