
அதிருங் கழல்ப ணிந்து – னடியேனுன்
அபயம் புகுவ தென்று – நிலைகாண
இதயந் தனிலி ருந்து – க்ருபையாகி
இடர்சங் கைகள்க லங்க – அருள்வாயே
எதிரங் கொருவ ரின்றி – நடமாடும்
இறைவன் தனது பங்கி – லுமைபாலா
பதியெங் கிலுமி ருந்து – விளையாடிப்
பலகுன் றிலும மர்ந்த – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : எழுதிகழ் புவன (குன்றுதோறாடல்) – திருப்புகழ் 304