அகிலாண்ட நாயகி 108 போற்றி

  1. ஓம் அகிலாண்ட நாயகி அடிமலர் போற்றி!
  2. ஆளுவாய் ஆனைக்கா அம்மா போற்றி!
  3. இன்பம் எவர்க்கும் ஈவாய் போற்றி!
  4. ஈருடல் சிவனொடும் ஆனாய் போற்றி!
  5. உலகுயிர் படைத்த ஒருத்தியே போற்றி!
  6. ஊரையும் உலகையும் காப்பாய் போற்றி!
  7. எழில்தரும் இயற்கையே எந்தாய் போற்றி!
  8. ஏழு பிறப்பிலும் எந்தெய்வம் போற்றி!
  9. ஐம்பூதம் உடலாய் ஆக்கினாய் போற்றி!
  10. ஒப்புயர் வில்லா ஒளியே போற்றி!

 

  1. ஓதுவார் உள்ளிருந்து இசைப்பாய் போற்றி!
  2. ஔவைநீ அப்பன்நீ அகிலா போற்றி!
  3. கற்பனை கடந்த கருத்தே போற்றி!
  4. காவிய ஓவியக் கருவே போற்றி!
  5. கிழக்கில் கிளர்ந்தெழும் கதிர்நீ போற்றி!
  6. குன்றமாய் மழையாய் நிற்பாய் போற்றி!
  7. கூடிடும் ஆறுகள் குளிர்கடல் போற்றி!
  8. கெடுப்பது இல்லாக் கேண்மைநீ போற்றி!
  9. ஓம் கேளிராய் வந்துடன் கேட்பாய் போற்றி!
  10. கொடுப்பதே தொழிலாய்க் குறையிலாய் போற்றி!

 

  1. கோயிலும் அன்பாக்குக் காட்சிநீ போற்றி!
  2. சக்கர ஞாலம் சுழற்றுவாய் போற்றி!
  3. சாத்திரம் வரையும் சாறுநீ போற்றி!
  4. சிந்திப்பவரின் சீரடி போற்றி!
  5. சீரும் சிறப்பும் செழித்தருள் போற்றி!
  6. சுருங்கும் அன்பைத் தாண்டுவாய் போற்றி!
  7. சூடும் குளிரும் நீயே போற்றி!
  8. செய்தி தருவதும் நின் செயல் போற்றி!
  9. சேர்ப்பதும் விடுப்பதும் நின்னருள் போற்றி!
  10. சொரிமலர் யானைகை வாங்கினாய் போற்றி!

 

  1. சோவென நீர்விடக் குளித்தாய் போற்றி!
  2. தண்ணெனச் சிலந்தி இடுபந்தல் போற்றி!
  3. தாவிடும் நாவல் மரக்கிளை போற்றி!
  4. திருமுனி வழிபட்ட சிவமங்கை போற்றி!
  5. தீந்தமிழ்த் தேவாரத் தேன்சுனை போற்றி!
  6. துயரறு சேவடித் துணையே போற்றி!
  7. தூயவர் நெஞ்சகம் துலங்குவாய் போற்றி!
  8. தென்றலை அணியாய்ச் சூடுவாய் போற்றி!
  9. தேன்மலர் தேடிடும் நறுமணம் போற்றி!
  10. தையலை உயர்த்திய தாயே போற்றி!

 

  1. தொண்டில் முன்னிருந்து தொடுப்பாய் போற்றி!
  2. தோழமை தொழிலில் காட்டுவாய் போற்றி!
  3. பரத்தை மறைத்த பாவையே போற்றி!
  4. கேஓம் பார்முதல் ஐந்தும் படைத்தாய் போற்றி!
  5. பிள்ளைகள் தந்து மகிழ்வாய் போற்றி!
  6. பீடும் பெருமையும் வளர்ப்பாய் போற்றி!
  7. புனிதக் காவிரிப் பொன்னுடை போற்றி!
  8. பூத்திகழ் பொன்னடி புரிவாய் போற்றி!
  9. பெரிய கல்வியின் பெரும்பொருள் போற்றி!
  10. பேறுகள் அருளும் பிராட்டியே போற்றி!

 

  1. பைங்கொடிக் காவில் பைங்கிளி போற்றி!
  2. பொறுமையின் உச்சியில் பழமே போற்றி!
  3. போற்றுவார் ஈர நெஞ்சமே போற்றி!
  4. ஞால உருண்டையின் நடுவிசை போற்றி!
  5. நம்புவார் அடையும் நற்பயன் போற்றி!
  6. நாவல் அடிப்பிரான் நம்மொளி போற்றி!
  7. நிலம்முதல் பசுமை நிறத்தாய் போற்றி!
  8. நீடுயர் வாழ்வை நல்குவாய் போற்றி!
  9. நுட்பாய் இறைவிதி நுவலுவாய் போற்றி!
  10. நூலில் நின்படம் காட்டுவாய் போற்றி!

 

  1. நெடியவான் அண்டமும் நின்னிழல் போற்றி!
  2. நேயப் பண்ணைக்கு நெடும்புனல் போற்றி
  3. நைந்துநைந் துருக்கும் நாயகி போற்றி!
  4. நொந்திடா தணைக்கும் நுதல்விழி போற்றி!
  5. நோயெலாம் தீர்க்கும் மருந்தாய் போற்றி!
  6. மதிசூடிப் பெருமான் மருங்காய் போற்றி!
  7. மாதுளை முகத்து மங்கையே போற்றி!
  8. மின்னிடு மாலை மிளிர்வாய் போற்றி!
  9. ஓம் மீத்திறன் அறிவைத் தருவாய் போற்றி!
  10. முப்பொருள் பாடமும் மொழிவாய் போற்றி!

 

  1. மூண்டெழு சோதியும் நீயே போற்றி!
  2. மென்னடை அன்னமாய் மேவுவாய் போற்றி!
  3. மேன்மைகள் உயிர்க்கெலாம் பொழிவாய் போற்றி!!
  4. மைதவழ் கண்ணே கரும்பே போற்றி!
  5. மொட்டவிழ் கையால் முகந்தருள் போற்றி!
  6. மோதலைத் தவிர்க்கும் நீதியே போற்றி!
  7. யாதும் நீயே தாயே போற்றி!
  8. வட்டவான் காதணி அணிந்தாய் போற்றி!
  9. வாழ்த்துவார் மனத்தகம் வாழ்வாய் போற்றி!
  10. விதியினை எழுதும் விரைமலர் போற்றி!

 

  1. வீடெலாம் விளக்காய் விளங்குவாய் போற்றி!
  2. வெற்றிவேல் தடக்கை கொற்றவை போற்றி!
  3. வேண்டுவார் வேண்டலைத் தருவாய் போற்றி!
  4. வையமாம் தேரில் வரும்தாய் போற்றி!
  5. கொடியரைக் கொன்று காட்டுவாய் போற்றி!
  6. குறைவிலா மழையும் பொழிவாய் போற்றி!
  7. மூவரும் தேவரும் வணங்குவர் போற்றி!
  8. முத்தொழில் நடைபெற மூட்டுவாய் போற்றி!
  9. கன்னியாய்ப் பூசனை பண்ணுவாய் போற்றி!
  10. காலமும் அருட்சக்தி காட்டுவாய் போற்றி!

 

  1. வழிபடும் தூயரை வாழ்த்துவாய் போற்றி!
  2. பக்தியின் கண்ணீர் பார்ப்பாய் போற்றி!
  3. மாயையை இயற்கையாய் ஆக்கினாய் போற்றி!
  4. ஓம் மந்திரச் சொல்லின் மறைத்தமிழ் போற்றி!
  5. சிலந்தியைச் செங்கணான் ஆக்கினாய் போற்றி!
  6. மடையனைப் புலவனாய் மாற்றினாய் போற்றி!
  7. அம்மையின் பெயரெலாம் அன்னைநீ போற்றி!
  8. ஆடும் சிவவொளி அளைந்தாய் போற்றி!
  9. அகிலா என்றதும் அண்டுவாய் போற்றி!
  10. வானில் கோள்பல வகுத்தாய் போற்றி!

 

  1. அண்டமும் அடுக்காய் அமைத்தாய் போற்றி!
  2. அண்டத்தில் பண்டம் காட்டினாய் போற்றி!
  3. அறிவுக்கு அடங்கா அண்டமே போற்றி!
  4. ஓமில் உயிரைப் படைத்தாய் போற்றி!
  5. உயிரில் ஒளியை உரைத்தாய் போற்றி!
  6. நீரிலே முளைத்த நின்சிவம் போற்றி!
  7. விழாவிலே உலாவரும் வியனருள் போற்றி!
  8. வித்தே போற்றி! விழியே போற்றி!!

இதையும் படிக்கலாம் : அபிராமி அம்மை பதிகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *