அஜீரண கோளாறு ஏற்படுவது பலருக்கு பெரும் அவஸ்தையை கொடுக்கக் கூடியது. சரியான நேரத்திற்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்கிற அக்கறை, சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என்கிற எண்ணம் பலருக்கும் இருப்பதில்லை.
நாம் சாப்பிடும் உணவு சரிவர செரிமானம் ஆகாமல் இருந்தால் அஜீரணம் ஏற்படுகிறது. சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது, நாம் சாப்பிடும் உணவு சாப்பிடும் முறை மற்றும் தூக்கமின்மை காரணமாகவும் அஜீரணம் ஏற்படலாம்.
அஜீரணம் ஏற்பட காரணம்
துரித உணவுகளை (fast food) அடிக்கடி சாப்பிடுவது, உணவை வேகமாக சாப்பிடுவது, போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, தூக்கமின்மை, மது அருந்தும் பழக்கம், புகைப்பழக்கம் .
அஜீரணம் அறிகுறிகள்
- பசியின்மை
- வயிறு உப்பிசம்
- புளித்த ஏப்பம்
- வயிற்று பிடிப்பு
- மலச்சிக்கல்
அஜீரணம் வீட்டு வைத்தியம்
1.எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஆகிய இரண்டையும் சம அளவில் கலந்து ஒரு நாளைக்கு ஒரு ஸ்பூன் எடுத்து கொள்ளுங்கள்.
2. அஜீரண கோளாறு உள்ளவர்கள் உணவு சாப்பிட்ட பின் சீரக தண்ணீர் குடித்து வந்தால் அஜீரணம் குணமாகும்.
3.வெது வெதுப்பான தண்ணீரில் ஒரு மூன்று பெருங்காயம் தூள் கலந்து குடித்தால் அஜீரண கோளாறு நீங்கும்.
4.கறிவேப்பிலை சிறிது சீரகம் , மற்றும் ஒரு சிறு துண்டு இஞ்சி இந்த மூன்றையும் ஒரு கிளாஸ் அளவு தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அறிய பின் வடிகட்டி குடித்து வந்தால் அஜீரணம் நீங்கும் .
5.ஒரு டம்ளர் மோரில் கால் டீஸ்பூன் மிளகு தூள்,கால் டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து தினமும் இரு வேளை குடித்து வந்தால் அஜீரணம் சரியாகும்.
அஜீரணம் ஏற்படாமல் தவிர்க்க
சரியான நேரத்திற்கு சாப்பிட வேண்டும் காலை உணவு 9 மணிக்குள்,மதிய உணவை 12- 2 மணிக்குள், இரவு உணவு 8 மணிக்குள் சாப்பிட்டு முடித்து விட வேண்டும்.
வயிறு நிறைய சாப்பிட கூடாது.
உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.அவசரமாக சாப்பிட கூடாது.
சாப்பிட்டு விட்டு உடனே தூங்க கூடாது. இரண்டு மணி நேரம் கழித்து தூங்க வேண்டும். இதனால் உணவு செரிமானம் எளிதாக நடக்கும்.