அமைவுற்று அடைய (திருத்தணிகை) – திருப்புகழ் 239 

அமைவுற் றடையப் பசியுற் றவருக்
கமுதைப் பகிர்தற் – கிசையாதே

அடையப் பொருள்கைக் கிளமைக் கெனவைத்
தருள்தப் பிமதத் – தயராதே

தமர்சுற் றியழப் பறைகொட் டியிடச்
சமனெட் டுயிரைக் – கொடுபோகுஞ்

சரிரத் தினைநிற் குமெனக் கருதித்
தளர்வுற் றொழியக் – கடவேனோ

இமயத் துமயிற் கொருபக் கமளித்
தவருக் கிசையப் – புகல்வோனே

இரணத் தினிலெற் றுவரைக் கழுகுக்
கிரையிட் டிடுவிக் – ரமவேலா

சமயச் சிலுகிட் டவரைத் தவறித்
தவமுற் றவருட் – புகநாடும்

சடுபத் மமுகக் குகபுக் ககனத்
தணியிற் குமரப் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : அரகர சிவன் அரி (திருத்தணிகை) – திருப்புகழ் 240

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *