அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 8வது தொகுதியாக அம்பத்தூர் தொகுதி உள்ளது. இத்தொகுதி, ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.
தொகுதி மறுசீரமைப்பில் அம்பத்தூர் தொகுதி 2011 சட்டமன்றத் தேர்தலின் போது புதிதாக உருவாக்கப்பட்டது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
2011 | எஸ். வேதாசலம் | அதிமுக | 99,330 |
2016 | வீ. அலெக்சாந்தர் | அதிமுக | 94,375 |
2021 | ஜோசப் சாமுவேல் | திமுக | 1,14,554 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,85,485 | 1,85,763 | 88 | 3,71,336 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
சென்னை மாநகராட்சியின் ஏழாவதாக உள்ள அம்பத்தூர் மண்டலம் வார்டு எண் 79 முதல் 93 வரை இதன் எல்லைகளாக உள்ளது. இதன் எல்லைகளாக உள்ள தொகுதிகள் வடக்கே மாதவரம் , தெற்கே மதுரவாயல் , கிழக்கே , அண்ணா நகர், வில்லிவாக்கம் மேற்கே ஆவடி.
அம்பத்தூர் தொகுதியின் எல்லைகளாக உள்ள பகுதிகள். வடக்கே கள்ளிக்குப்பம், தாதன்குப்பம், தெற்கே முகப்பேர், திருமங்கலம், கிழக்கே பாடி , அண்ணா நகர் மேற்கு பகுதி மேற்கே அம்பத்தூர் நகரம்.