அம்பொத்த விழி (திருச்செந்தூர்) – திருப்புகழ் 24

அம்பொத் தவிழித் தந்தக் கலகத்
தஞ்சிக் கமலக் – கணையாலே

அன்றிற் குமனற் றென்றற் குமிளைத்
தந்திப் பொழுதிற் – பிறையாலே

எம்பொற் கொடிமற் றுன்பக் கலனற்
றின்பக் கலவித் – துயரானாள்

என்பெற் றுலகிற் பெண்பெற் றவருக்
கின்பப் புலியுற் – றிடலாமோ

கொம்புக் கரிபட் டஞ்சப் பதுமக்
கொங்கைக் குறவிக் – கினியோனே

கொன்றைச் சடையற் கொன்றைத் தெரியக்
கொஞ்சித் தமிழைப் – பகர்வோனே

செம்பொற் சிகரப் பைம்பொற் கிரியைச்
சிந்தக் கறுவிப் – பொரும்வேலா

செஞ்சொற் புலவர்க் கன்புற் றதிருச்
செந்திற் குமரப் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : அருணமணி மேவு (திருச்செந்தூர்) – திருப்புகழ் 25

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *