அணிபட் டணுகித் திணிபட் டமனத்
தவர்விட் டவிழிக் – கணையாலும்
அரிசுற் றுகழைத் தவர்பெற் றவளத்
தவன்விட் டமலர்க் – கணையாலும்
பிணிபட் டுணர்வற் றவமுற் றியமற்
பெறுமக் குணமுற் – றுயிர்மாளும்
பிறவிக் கடல்விட் டுயர்நற் கதியைப்
பெறுதற் கருளைத் – தரவேணும்
கணிநற் சொருபத் தையெடுத் துமலைக்
கனியைக் கணியுற் – றிடுவோனே
கமலத் தயனைப் ப்ரணவத் துரையைக்
கருதிச் சிறைவைத் – திடுவோனே
பணியப் பணியப் பரமர்ப் பரவப்
பரிவுற் றொருசொற் – பகர்வோனே
பவளத் தவளக் கனகப் புரிசைப்
பழநிக் குமரப் – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : அதல விதல (பழனி) – திருப்புகழ் 106