
அந்தியூர் சட்டமன்றத் தொகுதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 103வது தொகுதியாக அந்தியூர் தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1962 | பெருமாள்ராஜு | இந்திய தேசிய காங்கிரசு | 22,533 |
1967 | ஈ. எம். நடராசன் | திமுக | 34,877 |
1971 | ஈ. எம். நடராசன் | திமுக | 32,691 |
1977 | ப. குருசாமி | அதிமுக | 23,950 |
1980 | ப. குருசாமி | அதிமுக | 34,498 |
1984 | உ. பி. மாதையன் | அதிமுக | 53825 |
1989 | வி. பெரியசாமி | அதிமுக | 26,702 |
1991 | வி. பெரியசாமி | அதிமுக | 52,592 |
1996 | ப. செல்வராசு | திமுக | 52,535 |
2001 | எஸ்.ஆர்.கிருஷ்ணன் | பாமக | 53,436 |
2006 | ச. குருசாமி | திமுக | 57,043 |
2011 | ச. ச. ரமணிதரன் | அதிமுக | 78496 |
2016 | கே. இரா. இராஜகிருஷ்ணன் | அதிமுக | 71,575 |
2021 | அ. கோ. வெங்கடாசலம் | திமுக | 79,096 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,05,964 | 1,09,242 | 16 | 2,15,222 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
கோபிசெட்டிபாளையம் வட்டம் (பகுதி)
புஞ்சைதுறைம்பாளையம், கொண்டைபாளையம், கனக்கம்பாளையம், பெருமுகை, சவண்டப்பூர்,அம்மாபாளையம், மேவாணி, பெருந்தலையூர், கூகலூர், புதுக்கரை, நஞ்சைபுளியம்பட்டி, பொலவக்காளிபாளையம், கடுக்கம்பாளையம் மற்றும் சந்தராபுரம் கிராமங்கள்.
வாணிப்புத்தூர் (பேரூராட்சி), கூகலூர் (பேரூராட்சி), மற்றும் பி.மேட்டுப்பாளையம் (பேரூராட்சி).
பவானி வட்டம் (பகுதி)
பர்கூர், கொமராயனூர், புதுர்ர், சென்னம்பட்டி, எண்னமங்கலம், சங்கரபாளையம், அந்தியூர், நகலூர், குப்பாண்டாம்பாளையம், பிரம்மதேசம், பச்சாம்பாளையம், கெட்டிசமுத்திரம், மாத்தூர், வெள்ளித்திருப்பூர், வேம்பத்தி, மூங்கில்பட்டி, கீழ்வாணி மற்றும் கூத்தம்பூண்டி கிராமங்கள்.
அந்தியூர் (பேரூராட்சி) மற்றும் அத்தாணி (பேரூராட்சி).
கோபிச்செட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதி