
அரக்கோணம் சட்டமன்றத் தொகுதி இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 38வது தொகுதியாக அரக்கோணம் தொகுதி உள்ளது. இத் தொகுதி அரக்கோணம் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1951 | பக்கதவத்சலு நாயுடு | சுயேச்சை | 21,057 |
1957 | சடையப்ப முதலியார் | இந்திய தேசிய காங்கிரஸ் | 29,669 |
1962 | எசு. ஜே. இராமசாமி | திமுக | 26,586 |
1967 | எசு. ஜே. இராமசாமி | திமுக | 38,478 |
1971 | என். எசு. பலராமன் | திமுக | 42,256 |
1977 | வி. கே. இராசு | அதிமுக | 24,630 |
1980 | எம். விசயசாரதி | அதிமுக | 36,314 |
1984 | வி. கே. இராசு | திமுக | 52,657 |
1989 | வி. கே. இராசு | திமுக | 42,511 |
1991 | லதா பிரியக்குமார் | இந்திய தேசிய காங்கிரஸ் | 61,314 |
1996 | ஆர். தமிழ்ச் செல்வன் | திமுக | 70,550 |
2001 | பவானி கருணாகரன் | அதிமுக | 67,034 |
2006 | எம். ஜெகன்மூர்த்தி | திமுக | 66,338 |
2011 | சு. ரவி | அதிமுக | 79,409 |
2016 | சு. ரவி | அதிமுக | 68,176 |
2021 | சு. ரவி | அதிமுக | 85,399 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,09,595 | 1,15,653 | 18 | 2,25,266 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- அரக்கோணம் வட்டம் (பகுதி)
வெங்கடேசபுரம்,செம்பேடு, சித்தம்பாடி, இச்சிபுத்தூர், கீழ்வனம், போளுர், உளியம்பாக்கம், கீலாந்தூர், பெருங்களத்தூர், கிருஷ்ணாபுரம், வளர்புரம், மூதூர், வேளுர், கொணலம், அணைப்பாக்கம், முன்வாய், கீழ்பாக்கம், காவனூர், கீழ்குப்பம், வடமாப்பாக்கம், கைனூர், தண்டலம், பெருமாள் ராஜபேட்டை, வேடல், அசமந்தூர், சித்தேரி, ரிதிபுத்தூர், மேல்பாக்கம், அம்மணூர், புளியமங்கலம், அம்பரிஷிபுரம், மோசூர், செய்யூர், நகரிகுப்பம், உறியூர், அணைக்கட்டுபுத்தூர், புதுகேசவரம், அனந்தாபுரம், ஆத்தூர், மாங்காட்டுச்சேரி (கடம்பநல்லூர்), அரிகிலபாடி, பொய்யப்பாக்கம். கீழாந்துரை, மேலாந்துரை, நாகவேடு, ஒச்சாலம், அரும்பாக்கம், சிலமந்தை, மேல்களத்தூர், சிருணமல்லி, இலுப்பைதண்டலம், பரமேள்வரமங்கலம், முருங்கை, சித்தூர், பின்னாவரம், ஆட்டுப்பாக்கம், சயனவரம் (ஜாகீர்), கீழ்வெங்கடாபுரம், பாலூர், மற்றும் கணவதிபுரம் கிராமங்கள்.
அரக்கோணம் (நகராட்சி), பெருமுச்சி (சென்சஸ் டவுன்) மற்றும் தக்கோலம் (பேரூராட்சி).