ஆற்காடு சட்டமன்றத் தொகுதி இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 42வது தொகுதியாக ஆற்காடு தொகுதி உள்ளது. இத் தொகுதி அரக்கோணம் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1951 | எசு. பஞ்சாட்சரம் செட்டியார் | இந்திய தேசிய காங்கிரஸ் | 13,613 |
1957 | எசு. காதர் செரிப் | இந்திய தேசிய காங்கிரஸ் | 20,643 |
1962 | முனிரத்தினம் | திமுக | 28,485 |
1967 | ஆற்காடு வீராசாமி | திமுக | 37,514 |
1971 | ஆற்காடு வீராசாமி | திமுக | 39,126 |
1977 | கே. ஜே. உய்யகொண்டான் | அதிமுக | 27,193 |
1980 | ஏ. எம். சேதுராமன் | அதிமுக | 35,998 |
1984 | டி. பழனி | அதிமுக | 52,222 |
1989 | டி. ஆர். கஜபதி | திமுக | 34,775 |
1991 | கோ. விசுவநாதன் | அதிமுக | 61,712 |
1996 | பி. என். சுப்பிரமணி | திமுக | 62,974 |
2001 | பி. நீலகண்டன் | அதிமுக | 61,474 |
2006 | கே. எல். இளவழகன் | பாமக | 60,286 |
2011 | ஆர். சீனிவாசன் | அதிமுக | 93,146 |
2016 | ஜெ. இல. ஈசுவரப்பன் | திமுக | 84,182 |
2021 | ஜெ. இல. ஈசுவரப்பன் | திமுக | 1,03,885 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,26,845 | 1,33,916 | 26 | 2,60,787 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- ஆற்காடு வட்டம் (பகுதி) – ஆற்காடு நகரம் 1-9 வார்டுகள்
- திமிறி வட்டம்
- வேலூர் வட்டம் (பகுதி)
பஸமடை, இடையஞ்சாத்து, அடுக்கம்பாறை, துத்திப்பட்டு, சிறுகளம்பூர், நெல்வாய், சாத்துமதுரை, மூஞ்சூர்பட்டு, பங்களத்தான், சலமநத்தம், கணியம்பாடி, வேப்பம்பட்டும். கனிக்கனியன், கதலாம்பட்டு, பலாத்துவண்ணான், சிங்கிரிகோயில், வல்லம், கீழ்பள்ளிபட்டு, மோட்டுபாளையம், கம்மசமுத்திரம் மற்றும் மோத்தக்கல் கிராமங்கள்.