
அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 207வது தொகுதியாக அருப்புக்கோட்டை தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1977 | எம். ஜி. இராமச்சந்திரன் | அதிமுக | 43,065 |
1980 | எம். பிச்சை | அதிமுக | 42,589 |
1984 | எம். பிச்சை | அதிமுக | 39,839 |
1986 (இடைத்தேர்தல்) | பஞ்சவர்ணம் | அதிமுக | – |
1989 | வி. தங்கபாண்டியன் | திமுக | 44,990 |
1991 | வி. ஜி. மணிமேகலை | அதிமுக | 56,985 |
1996 | வி. தங்கபாண்டியன் | திமுக | 45,081 |
2001 | கே. கே. சிவசாமி | அதிமுக | 49,307 |
2006 | தங்கம் தென்னரசு | திமுக | 52,002 |
2011 | வைகைச் செல்வன் | அதிமுக | 76,546 |
2016 | கே. கே. எஸ். எஸ். ஆர். ராமசந்திரன் | திமுக | 81,485 |
2021 | கே. கே. எஸ். எஸ். ஆர். ராமசந்திரன் | திமுக | 91,040 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,04,969 | 1,11,218 | 17 | 2,16,204 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
அருப்புக்கோட்டை வட்டம் (பகுதி)
வில்லிபத்ரி, சூலக்கரை, கல்லுமார்பட்டி, குல்லூர்சந்தை, பாலவநத்தம், கோபாலபுரம், கோவிலாங்குளம், கட்டன்குடி, பாலையம்பட்டி, பொய்யாங்குளம், குருஞ்சாங்குளம், புலியூரான், செம்பட்டி, மேட்டுதொட்டியாங்குளம், கஞ்சநாயக்கன்பட்டி, கட்டகஞ்சம்பட்டி, சுக்கிலநத்தம், திருவிருந்தாள்புரம், டி.மீனாட்சிபுரம், ஆமணக்குநத்தம், கொத்திப்பாறை, குருந்தமடம், போடம்பட்டி, செட்டிக்குறிச்சி, வடக்கு கொப்புசித்தம்பட்டி, கொப்புசித்தம்பட்டி, பந்தல்குடி, செட்டிபட்டி, வதுவார்பட்டி, தும்மக்குண்டு, பி.ஆண்டிபட்டி, வேலாயுதபுரம் மற்றும் அத்திப்பட்டி கிராமங்கள்.
அருப்புக்கோட்டை (நகராட்சி).
விருதுநகர் வட்டம் (பகுதி)
மேட்டுக்குண்டு, கடம்பன்குளம், சென்னல்குடி, செட்டிபட்டி, கோட்டைநத்தம், எண்டப்புலி, கோவில்வீரார்பட்டி, வலையப்பட்டி, மன்னார்கோட்டை, ஆவுடையாபுரம், துலுக்கப்பட்டி, கோட்டையூர், சுந்தரலிங்கபுரம், புதுப்பட்டி மற்றும் அப்பநாயக்கன்பட்டி கிராமங்கள்.
சாத்தூர் வட்டம் (பகுதி)
குமாரலிங்கபுரம், முத்துலிங்கபுரம், வேப்பிலைப்பட்டி, சந்தையூர், கோல்வார்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, குண்டலகுத்தூர், பாப்பாகுடி, கோசுக்குண்டு, அத்திபட்டி, சிறுகுளம், மேலமடை, என்.மேட்டுபட்டி (நென்மணி), முடித்தாலைநாகலாபுரம், நென்மேனி, பொட்டிரெட்டியாபட்டி, சிந்துவாம்பட்டி, அய்யம்பட்டி, உப்பத்தூர், ஊமத்தம்பட்டி, ஓமநாயக்கம்பட்டி, சுப்பிரமணியபுரம், பெத்துரெட்டிபட்டி, சின்னதம்பியாபுரம், முத்தாண்டியபுரம், ஓ.முத்துசாமிபுரம், கரிசல்பட்டி, முள்ளிசேவல்முத்துசாமிபுரம், முள்ளிசேவல் என்கிற சொக்கலிங்காபுரம், நல்லமுத்தான்பட்டி கஞ்சம்பட்டி மற்றும் ராவுத்தம்பட்டி கிராமங்கள்.