அருத்தி வாழ்வொடு (பழனி) – திருப்புகழ் 109 

அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியு – முறவோரும்
அடுத்த பேர்களு மிதமுறு மகவொடு – வளநாடும்

தரித்த வூருமெ யெனமன நினைவது – நினையாதுன்
தனைப்ப ராவியும் வழிபடு தொழிலது – தருவாயே

எருத்தி லேறிய இறையவர் செவிபுக – வுபதேசம்
இசைத்த நாவின இதணுறு குறமக – ளிருபாதம்

பரித்த சேகர மகபதி தரவரு – தெய்வயானை
பதிக்கொ ளாறிரு புயபழ நியிலுறை – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : அவனிதனிலே (பழனி) – திருப்புகழ் 110 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *