ஆதாளிகள் புரி (பழனி) – திருப்புகழ் 112 

ஆதா ளிகள்புரி கோலா கலவிழி
யாலே யமுதெனு – மொழியாலே

ஆழ்சீ ரிளநகை யாலே துடியிடை
யாலே மணமலி – குழலாலே

சூதா ரிளமுலை யாலே யழகிய
தோடா ரிருகுழை – யதனாலே

சோரா மயல்தரு மானா ருறவிடர்
சூழா வகையருள் – புரிவாயே

போதா ரிருகழல் சூழா ததுதொழில்
பூணா தெதிருற – மதியாதே

போரா டியஅதி சூரா பொறுபொறு
போகா தெனஅடு – திறலோனே

வேதா வுடனெடு மாலா னவனறி
யாதா ரருளிய – குமரேசா

வீரா புரிவரு கோவே பழநியுள்
வேலா இமையவர் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : ஆலகாலம் என (பழனி) – திருப்புகழ் 113 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *