
ஆத்தூர் – திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 129வது தொகுதியாக ஆத்தூர் – திண்டுக்கல் தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1952 | டி. எஸ். சௌந்தரம் | இந்திய தேசிய காங்கிரசு | – |
1957 | ஆறுமுகசாமி செட்டியார் | இந்திய தேசிய காங்கிரசு | – |
1962 | வி. எஸ். எஸ். மணி செட்டியார் | திமுக | – |
1967 | வி. எஸ். எஸ். மணி செட்டியார் | திமுக | – |
1977 | எ. வெள்ளைச்சாமி | அதிமுக | 31,590 |
1980 | எ. வெள்ளைச்சாமி | அதிமுக | 55,359 |
1984 | இரா. நெடுஞ்செழியன் | அதிமுக | 67,178 |
1989 | இ. பெரியசாமி | திமுக | 37,469 |
1991 | எஸ். எம். துரை | அதிமுக | 81,394 |
1996 | இ. பெரியசாமி | திமுக | 82,294 |
2001 | பி. கே. டி. நடராஜன் | அதிமுக | 64,053 |
2006 | இ. பெரியசாமி | திமுக | 76,308 |
2011 | இ. பெரியசாமி | திமுக | 1,12,751 |
2016 | இ. பெரியசாமி | திமுக | 1,21,738 |
2021 | இ. பெரியசாமி | திமுக | 1,65,809 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,39,819 | 1,50,891 | 26 | 2,90,736 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
திண்டுக்கல் தாலுக்கா (பகுதி)
சுள்ளெறும்பு, குருநாதநாயக்கனூர், பளங்காநூத்து, நீலமலைகோட்டை, கே.புதுக்கோட்டை, அழகுப்பட்டி, சில்வர்பட்டி, கோத்தபுல்லி, காமாட்சிபுரம், தெட்டுபட்டி, மாங்கரை, அம்மாபட்டி, குத்தாத்துபட்டி, அணைப்பட்டி, சிண்டலகுண்டு, தாமரைக்குளம்,கசவனம்பட்டி, பன்றிமலை, ஆடலூர், சத்திரபட்டி, பழையகன்னிவாடி, கரிசல் பட்டி,வீரக்கல், கும்பம்பட்டி, பித்தளைப்பட்டி, பிள்ளையார்நத்தம், ஆலமரத்துபட்டி, வக்கம்பட்டி, முன்னிலகோட்டை, பஞ்சம்பட்டி (வடக்கு), பாறைபட்டி, மனலூர், ஆத்தூர், ஜிவல்சரகு, கலிங்கம்பட்டி, பாளையம்கோட்டை, போடிகாமன்வாடி, சித்தரேவு, தேவரப்பன்பட்டி, அய்யம்பாளையம், கீழகோட்டை, தொப்பம்பட்டி மற்றும் அம்பாதுரை கிராமங்கள்.
அகரம் (பேரூராட்சி), தாடிக்கொம்பு (பேரூராட்சி), ஸ்ரீராமபுரம் (பேரூராட்சி), கன்னிவாடி (பேரூராட்சி), சின்னாளப்பட்டி (பேரூராட்சி), சித்தய்யன்கோட்டை (பேரூராட்சி), அய்யம்பாளையம் (பேரூராட்சி).