
ஆத்தூர் (தனி) சட்டமன்றத் தொகுதி சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதே பெயரில் திண்டுக்கல் மாவட்டத்திலும் ஒரு சட்டமன்றத் தொகுதி உள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள முக்கிய நகராட்சிகளின் ஒன்றான ஆத்துரை தலைமையிடமாக கொண்டு ஆத்தூர் தனி தொகுதி அமைந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 82வது தொகுதியாக ஆத்தூர் தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1951 | எம். பி. சுப்பிரமணியம் | சுயேச்சை | 12,394 |
1957 | இருசப்பன் | சுயேச்சை | 30,984 |
1962 | எஸ். அங்கமுத்து நாயக்கர் | இந்திய தேசிய காங்கிரசு | 23542 |
1967 | கே. என். சிவபெருமாள் | திமுக | 40,456 |
1971 | வி. பழனிவேல் கவுண்டர் | திமுக | 39,828 |
1977 | சி. பழனிமுத்து | இந்திய தேசிய காங்கிரசு | 19,040 |
1980 | சி. பழனிமுத்து | இந்திய தேசிய காங்கிரசு | 38,416 |
1984 | சி. பழனிமுத்து | இந்திய தேசிய காங்கிரசு | 55,927 |
1989 | அ. ம. ராமசாமி | திமுக | 33,620 |
1991 | வி. தமிழரசு | அதிமுக | 61,060 |
1996 | அ. ம. ராமசாமி | திமுக | 59,353 |
2001 | எ. கே. முருகேசன் | அதிமுக | 64,936 |
2006 | எம். ஆர். சுந்தரம் | இந்திய தேசிய காங்கிரசு | 53,617 |
2011 | ஆர். சுபா | தேமுதிக | 72,922 |
2016 | ஏ. மருதமுத்து | அதிமுக | 74,301 |
2021 | அ. நல்லதம்பி | அதிமுக | 9,568 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,19,920 | 1,28,126 | 16 | 2,48,062 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
ஆத்தூர் தாலுக்கா (பகுதி)
இடையப்பட்டி, பனைமடல், செக்கடிப்பட்டி,குமாரபாளையம், கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி, மன்னூர் (ஆர்.எப்), மன்னூர், கோவில்புதூர், கரியகோயில்வளவு, குன்னூர், சூலாங்குறிச்சி, அடியனூர், ராமநாயக்கன்பாளையம்,கொட்டவாடி, பேளூர்கரடிப்பட்டி, மேட்டுடையாம் பாளையம், பெரிய கிருஷ்ணாபுரம், சின்னகிருஷ்ணாபுரம், வடகூத்தம்பட்டி, புத்திரகவுண்டன்பாளையம், வீரக்கவுண்டனூர், ஓலப்பாடி, கல்பகனூர், மேட்டுப்பாளையம், ஜாரிகொத்தம்பாடி, அழகாபுரம், அப்பமசமுத்திரம், கீழாவாரை, பட்டிமேடு விரிவாக்கம் (ஆர்.எப்),முட்டல், அம்மம்பாளையம், கல்லாநத்தம், தென்னங்குடிபாளையம், அக்கிசெட்டிபாளையம், முத்தாக்கவுண்டனூர், ஆரியபாளையம், உமையாள்புரம், ஏத்தாப்பூர், கரடிப்பட்டி, தமையனூர், மேற்கு ராஜபாளையம், களரம்பட்டி, ரங்கப்பநாயக்கன்பாளையம், கோபாலபுரம், மல்லியகரை, ஈச்சம்பட்டி, சொக்கநாதபுரம், தாண்டவராயபுரம், துலுக்கனூர், மஞ்சினி, புங்கவாடி, பைத்தூர்,சீலியம்பட்டி, அரசநத்தம் மற்றும் வளையமாதேவி கிராமங்கள்.
கீரிப்பட்டி (பேரூராட்சி), ஏத்தாப்பூர் (பேரூராட்சி), பெத்தநாயக்கன்பாளையம் (பேரூராட்சி), ஆத்தூர் (நகராட்சி) மற்றும் நரசிங்கபுரம் (பேரூராட்சி).