அவாமருவு (சுவாமிமலை) – திருப்புகழ் 201

அவாமரு வினாவசு தைகாணும டவாரெனு
மவார்கனலில் வாழ்வென் – றுணராதே

அராநுக ரவாதையு றுதேரைக திநாடும
றிவாகியுள மால்கொண் – டதனாலே

சிவாயவெ னுநாமமொ ருகாலுநி னையாததி
மிராகரனை வாவென் – றருள்வாயே

திரோதம லமாறும டியார்கள ருமாதவர்
தியானமுறு பாதந் – தருவாயே

உவாவினி யகானுவி னிலாவும யில்வாகன
முலாசமுட னேறுங் – கழலோனே

உலாவுத யபாநுச தகோடியு ருவானவொ
ளிவாகுமயில் வேலங் – கையிலோனே

துவாதச புயாசல ஷடாநந வராசிவ
சுதாஎயினர் மானன் – புடையோனே

சுராதிப திமாலய னுமாலொடு சலாமிடு
சுவாமிமலை வாழும் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : ஆனனம் உகந்து (சுவாமிமலை) – திருப்புகழ் 202

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *