
அவினாசி சட்டமன்றத் தொகுதி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 108வது தொகுதியாக அவினாசி தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1957 | கே. மாரப்பக் கவுண்டர் | இந்திய தேசிய காங்கிரசு | 20,716 |
1962 | கே. மாரப்பக் கவுண்டர் | இந்திய தேசிய காங்கிரசு | 27,009 |
1967 | ஆர். கே. கவுண்டர் | சுதந்திரா | 31,927 |
1971 | டி. ஓ. பெரியசாமி | சுயேச்சை | 29,356 |
1977 | எஸ். என். பழனிசாமி | இந்திய தேசிய காங்கிரசு | 22,550 |
1980 | எம். ஆறுமுகம் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 33,294 |
1984 | பி. லட்சுமி | அதிமுக | 58,677 |
1989 | ஆர். அண்ணாநம்பி | அதிமுக | 33,964 |
1991 | எம். சீனியம்மாள் | அதிமுக | 69,774 |
1996 | ஜி. இளங்கோ | திமுக | 66,006 |
2001 | எசு. மகாலிங்கம் | அதிமுக | 59,571 |
2006 | ஆர். பிரேமா | அதிமுக | 54,562 |
2011 | ஏ. கருப்புசாமி | அதிமுக | 1,03,002 |
2016 | ப. தனபால் | அதிமுக | 93,366 |
2021 | ப. தனபால் | அதிமுக | 1,16,674 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,34,300 | 1,42,394 | 4 | 2,76,698 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- திருமுருகன்பூண்டி நகராட்சி
- அன்னூர் பேரூராட்சி
- அவிநாசி பேரூராட்சி
ஊராட்சிகள் சேவூர் பொங்கலூர் ஆலத்தூர் மாங்கரைசலவை பாளையம் குட்டகம் போத்தம் பாளையம் புலிப்பார் தாதனூர் புஞ்சை தாமரை குளம் வடுக பாளையம் பாப்பன் குளம் சேவூர் தண்டுகாரன் பாளையம் முரியாண்டம் பாளையம் கனூர் ராமநாதபுரம் வேட்டுவ பாளையம் நம்பியம் பாளையம் கருவலூர் உப்பிலி பாளையம் தெக்கலூர் செம்பிய நல்லூர் வேலாயுதம் பாளையம் புதுப்பாளையம் கணியம்பூண்டி ராக்கி பாளையம் பழங்கரை கருமா பாளையம் சின்னாரி பாளையம் நடுவச்சேரி அய்யம் பாளையம் துலக்காமுத்தூர் குப்பாண்டம் பாளையம் அவிநாசி வட்டம்.