உடல் எடை மற்றும் தொப்பையால் நிறைய பேர் அவஸ்தைப் படுகின்றனர். அதுமட்டுமின்றி அதிகப்படியான உடல் எடையால், உடலில் பல நோய்களும் எளிதில் தாக்குகின்றன. ஆகவே பலர் தொப்பை மற்றும் உடல் எடையை குறைப்பதற்கு ஜிம், டயட் போன்றவற்றை மேற்கொள்கின்றனர். பெரும்பாலானோர் தொப்பை விரைவில் குறைய வேண்டுமென்று கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்வார்கள்.
அவ்வாறு மேற்கொள்வதால் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை. அதற்கு பதிலாக உடலுக்கு கேடு தான் விளையும். எனவே தொப்பை குறைக்க சில ஆரோக்கியமான குறிப்புகள்.
சோம்பு
உடல் எடை குறைய ஒரு சிறந்த மருந்து எனவே உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் தினமும் சோம்பை சிறிதளவு எடுத்து கொண்டு ஒரு கப் தண்ணீரில் நன்றாக காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
அன்னாசி பழம்
ஒரு அன்னாசிப் பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் நான்கு தேக்கரண்டி ஓமம் பொடியை சேர்த்து நன்றாக கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும். மறு நாள் காலை அந்த கலவையை வடிகட்டி வெறும் வயிற்றில் தொடர்ந்து பத்து நாட்கள் சாப்பிட்ட வேண்டும். அதன் பிறகு தொப்பை குறைய ஆரம்பிக்கும்.
தேன்
காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெந்நீரில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் எடையும் குறையும், அதேபோல் தொப்பை குறைய ஆரம்பிக்கும்.
பப்பாளிக்காய்
பப்பாளிக்காயை கூட்டு செய்து தினமும் சாப்பிடலாம் இதனால் மிக விரைவில் தொப்பை கரையும். உணவில் அதிகம் தேங்காய் சேர்க்காமல் வெங்காயம் சேர்க்கலாம்.
நெல்லிக்காய் சாறு
விதை நீக்கிய நெல்லிக்காயை சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சி சாறு கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும் இதனால் தொப்பை குறைய ஆரம்பிக்கும்.
அருகம்புல் சாறு
அருகம்புல் சாறு எடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் பச்சை பாலில் கலந்து குடித்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து விடும்.
எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாறை எடுத்து ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து காலை வெறும் வயிற்றில் தினமும் அருந்தி வர உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் வெளியெரும். இதன் மூலமும் வேகமாக உடல் எடை குறையும்
காய்கறி சாறு
வெள்ளேரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவ்வகை சாறு எடுத்து குடித்தாலும் உடல் எடை குறையும்.
கரிசலாங்கண்ணி
கரிசலாங்கண்ணி இலையை பாசி பருப்புடன் சேர்த்து தினமும் சமையல் செய்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்.
முள்ளங்கி கீரை
முள்ளங்கி கீரையை உணவில் அதிகம் சேர்ப்பதன் மூலம் உடல் எடை மிக விரைவில் குறையும், அதேபோல் தொப்பை குறைய ஆரம்பிக்கும்.
பிரண்டை
பிரண்டை தண்டுகள் தோல் நிக்கி சிறு சிறு துண்டுகளாக்கி வேக வைத்து அதை நன்றாக காய வைத்து, பொடி செய்து கொள்ள வேண்டும். அதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
திரிபலா பொடி
கடுங்காய், நெல்லிக்காய், திரிபலா இவைகளை பொடியாக்கி தினமும் காலை வெறும் வயிற்றில் தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் தொப்பை குறையும்.
ஆமணக்கின் வேர்
இந்த வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவில் ஊற விட்டு காலை அதனை பிழிந்து நீரை வடிக்கட்டி குடித்தால் உடல் பருமன் குறையும்.
மேலும் படிக்க
வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்