
பவானி சட்டமன்றத் தொகுதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 102வது தொகுதியாக பவானி தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1952 | பி. கே. நல்லசாமி | இந்திய தேசிய காங்கிரசு | 18,649 |
1957 | ஜி. ஜி. குருமூர்த்தி | இந்திய தேசிய காங்கிரசு | 49,926 |
1962 | என். கே. இரங்கநாயகி | இந்திய தேசிய காங்கிரசு | 32,739 |
1967 | ஏ. எம். இராஜா | திமுக | 43,353 |
1971 | ஏ. எம். இராஜா | திமுக | 38,527 |
1977 | எம். ஆர். சவுந்தரராஜன் | அதிமுக | 22,989 |
1980 | பி. ஜி. நாராயணன் | அதிமுக | 44,152 |
1984 | பி. ஜி. நாராயணன் | அதிமுக | 58,350 |
1989 | ஜி. ஜி. குருமூர்த்தி | சுயேச்சை | 36,371 |
1991 | எஸ். முத்துசாமி | அதிமுக | 61,337 |
1996 | எஸ். என். பாலசுப்ரமணியன் | தமாகா | 57,256 |
2001 | கே. சி. கருப்பண்ணன் | அதிமுக | 64,405 |
2006 | கே. வி. இராமநாதன் | பாமக | 52,603 |
2011 | பி. ஜி. நாராயணன் | அதிமுக | 87,121 |
2016 | கே. சி. கருப்பண்ணன் | அதிமுக | 85,748 |
2021 | கே. சி. கருப்பண்ணன் | அதிமுக | 1,00,915 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,17,478 | 1,21,849 | 12 | 2,39,339 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
பவானி வட்டம் (பகுதி)
இலிப்பிலி, கன்னப்பள்ளி, அட்டவணைப்புதூர், முகாசிப்புதூர், பட்லூர், ஒட்டப்பாளையம், பருவாச்சி, புன்னம், மைலம்பாடி, கல்பாவி, குறிச்சி, பூனாச்சி, பூதப்பாடி, சிங்கம்பேட்டை, படவல்கால்வாய், காடப்பநல்லூர், கேசரிமங்கலம், சன்யாசிப்பட்டி, வரதநல்லூர், தாளகுளம், பவானி, ஒரிச்சேர், வைரமங்கலம், ஆலத்தூர், கவுந்தப்பாடி, ஓடத்துறை, ஆண்டிக்குளம், ஊராட்சிக்கோட்டை, சின்னப்புலியூர், பெரியபுலியூர் மற்றும் செட்டிபாளையம் கிராமங்கள்.
நெரிஞ்சிப்பேட்டை (பேரூராட்சி), அம்மாப்பேட்டை (பேரூராட்சி), ஒலகடம் (பேரூராட்சி), ஆப்பக்கூடல் (பேரூராட்சி), ஜம்பை (பேரூராட்சி), பவானி (நகராட்சி) மற்றும் சலங்கப்பாளையம் (பேரூராட்சி).