ரத்த தானம் பற்றிய முக்கிய தகவல்கள்..!

blood donor day

உலக சுகாதார நிறுவனத்தால் ஆண்டுதோறும் ஜூன் 14-ம் தேதி ‘உலக ரத்த தான நாள்’ கடைப்பிடிக்கப்படுகிறது. `நீரின்றி அமையாது உலகு’ என்பதைப் போல ரத்தமின்றி செயல்படாது உடல். ரத்த ஓட்டத்தின் துணை இல்லாமல் உடலின் எப்பகுதியும் இயங்க முடியாது.

ரத்த ஓட்டம் நின்றால் உடல் இயங்குவது அற்றுவிடும். ரத்தம் உடலுக்குத் தொடர்ந்து தேவைப்படும், இன்றியமையாத செந்நிற நீர்மப் பொருள்.

ரத்தம்

ரத்தமானது மூளைக்கும் மற்ற உறுப்புகளுக்கும் தேவையான ஆக்சிசன், ஊட்டச்சத்துக்கள் போன்றவற்றை உடல் கலங்களுக்கு எடுத்துச் செல்வதோடு அல்லாமல், அங்கே பெறப்படும் காபனீரொக்சைட்டு, லாக்டிக் அமிலம் போன்ற கழிவுகளை, கலங்களிலிருந்து அகற்றி எடுத்துச் செல்வதிலும் பங்கு கொள்ளும்.

ரத்த ஓட்டத்தின் துணை இல்லாமல் உடலின் எப்பகுதியும் இயங்க முடியாது. இதன் ஓட்டம் நின்றால் உடல் இயங்குவது அற்றுவிடும்.

ரத்தம் என்பது சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், ரத்த சிறுதட்டுக்கள் கொண்ட நீர்மப்பொருள். ரத்தத்தில் உள்ள திண்மப் பொருள்களின் அளவு 40% எனவும், நீர்மப்பொருள் 60% எனவும் கண்டுள்ளனர். திண்மப் பொருள்களில் பெரும்பாலானவை சிவப்பணுக்கள் தாம் (96%). வெள்ளை அணுக்கள் 3%, ரத்த சிறுதட்டுக்கள் 1%.

மனித ரத்ததில் வெள்ளை ரத்த அணுக்கள், சிவப்பு ரத்த அணுக்கள் மற்றும் பிளாட்டிலேட்ஸ் என மூன்று வகைகள் உள்ளது. வெள்ளை அணுக்கள் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இந்த சிவப்பு அணுக்கள் ஆக்சிஜனை உடலில் கடத்தி செல்கிறது. பிளாட்டிலேட்ஸ் என்பவை ரத்தம் உறைவதை தடுக்கிறது.

மனிதரின் உடலில் சுமார் 4-5 லிட்டர் ரத்தம் ஓடும். 72 கிலோ எடை உள்ள ஒருவரின் உடலில் சுமார் 4.5 லிட்டரும், 36 கிலோ எடை உள்ள ஒரு சிறுவனின் உடலில் சுமார் சரிபாதி அளவு குருதியும், 4 கிலோ உடைய ஒரு குழந்தையின் உடலில் சுமார் 300 மில்லி லிட்டரும் (0.3 லிட்டர் மட்டுமே) ரத்தம் ஓடும்.

எனவே சிறு குழந்தைக்கு அடிபட்டால் ஏற்படும் ரத்தப்பெருக்கினால் ரத்தயிழப்பு ஏற்படும்போது அது பெரிதும் தீங்கிழைக்க வல்லது. பொதுவாக காற்றழுத்தம் குறைவாக இருக்கும் உயரமான இடங்களில் வாழ்பவர்களின் உடலில் ரத்ததின் அளவு சுமார் 1.9 லிட்டர் அதிகமாக இருக்கும்.

ரத்தம் செப்பமுற இயங்க வேறு பல உறுப்புக்களும் துணைபுரிகின்றன. ரத்தம் ஆக்சிசனை நுரையீரல் வழியாக பெறுகின்றது. பின்னர் குருதியோட்டம் திரும்பும் வழியில் கார்பனீரொக்சைட்டு வளிமத்தை நுரையீரல் பெற்று, வெளிவிடும் மூச்சின் வழியாக வெளியேற்றுகிறது.

உடல் அமைப்பில் ஆண் மற்றும் பெண்ணிற்கு சில மாற்றங்கள் இருக்கும் அதே போன்று தான் இந்த ரத்த அளவிலும் இருக்கிறது. பெண்ணிற்கு 4-5 லிட்டர் ரத்தமும், ஆணிற்கு 5-6 லிட்டர் ரத்தமும் சராசரியாக அவர்களின் உடலில் இருக்குமாம். இது ஒவ்வொருவரின் உடல் பருமனை சார்ந்தது.

ரத்த வகைகள் கண்டறிவது

ரத்தத்தில் உள்ள சிறிய புரதமானது ஆன்டிஜென் என அழைக்கப்படுகிறது. இதனை வைத்துதான் ரத்த வகை கணிக்க படுகிறது. அதாவது, ஒருவர் ரத்தத்தில் A ஆன்டிஜென் இருந்தால் A குரூப் என்றும், B ஆன்டிஜென் இருந்தால் B குரூப் என்றும், இதில் இவை இரண்டும் இருந்தால் AB குரூப் என்றும், இவற்றில் எந்தவித ஆண்டிஜென்னும் இல்லை என்றால் O குரூப் என்றும் கருதபடுகிறது.

ரத்த வகைகள்

  • A
  • B
  • AB
  • O
  • Duffy
  • Lutheran
  • Bombay
  • MN system

ரத்தம் கொடுப்பதற்கு முன்னர் பரிசோதனை

  • ரத்தப் பிரிவு
  • ரத்த அழுத்தத்தின் அளவு
  • உடலின் வெப்பநிலை
  • ஹீமோகுளோபின்

ரத்த தானத்துக்குப் பின்னர் பரிசோதனை

  • டெங்கு
  • மலேரியா
  • டைஃபாய்டு
  • ஹெப்படைட்டிஸ்
  • எச்.ஐ.வி

ரத்தத்தின் தேவைகள்

அறுவைச் சிகிச்சையின் போதும், விபத்தின் போதும் ஏற்படும் இரத்த இழப்பை ஈடு செய்து அவருடைய உயிரைக் காக்கும் பொருட்டு இரத்த தானம் தேவைப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் நமது நாட்டின் மொத்ததேவை சுமார் 4 கோடி யூனிட்கள் ஆகும் (1 யூனிட் இரத்தத்தின் அளவு 350 மில்லி லிட்டர் ஆகும்). ஆனால் கிடைக்கப்படுவதோ வெறும் 40 லட்சம் யூனிட்கள் மட்டுமே.

ஒவ்வொரு நாளும் 38000 க்கும் மேல் இரத்த கொடையாளிகள் தேவை. பெரும்பாலும் தேவைப்படும் பிரிவு O ஆகும். ஒவ்வொரு ஆண்டும் 1 மில்லியனுக்கும் மேல் புற்றுநோய் கண்டறியப்படுகிறது. இரத்தம் இவர்களில் பலருக்கு தேவைப்படலாம். கீமோதெரபி சிகிச்சையின் போது தினமும் தேவைப்படும்.

யாரெல்லாம் ரத்தம் கொடுக்கலாம்

இரத்த தானம் செய்பவரின் வயது 18 முதல் 60 வயது வரை உள்ள அனைவரும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்யலாம்.

ரத்தத்தில் உள்ள ஹிமோகுளோபின் அளவு 12-16 கிராமிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

பொதுவாக, ஆண்கள் மூன்று மாதத்துக்கு ஒரு முறையும், பெண்கள் நான்கு மாதத்துக்கு ஒரு முறையும் ரத்ததானம் செய்வது சிறந்தது என்று கூறப்படுகிறது. மேலும் எந்த ஒரு தொற்று நோய் பாதிப்பு ஏற்பட்டவராகவும் இருத்தல் கூடாது.

ஒரு முறை ரத்ததான, செய்துவிட்டால் 3 மாதம் கழித்து மீண்டும் ரத்ததானம் செய்யலாம்.

ரத்த தானம் யாரெல்லாம் செய்யக் கூடாது

மாதவிடாய்க் காலங்கள், கர்ப்பக் காலங்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ரத்த தானம் செய்யக் கூடாது.

டைபாய்டு, மலேரியா போன்ற காய்ச்சல் வந்தவர்கள், சிகிச்சை பெற்று ஆறு மாதங்கள் வரை ரத்தத் தானம் செய்யக் கூடாது.

மது அருந்தியவர்கள் அடுத்த 24 மணி நேரம் வரை ரத்தம் அழிக்க கூடாது.

எச்.ஐ.வி, மஞ்சள் காமாலை தொற்றுள்ளவர்களின் ரத்தத்தைப் பெறக்கூடாது.

இதயநோய், காசநோய், வலிப்புநோய் உடையவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், புற்றுநோயாளிகள் எப்போதும் ரத்ததானம் செய்யக்கூடாது.

எப்படி ரத்தம் சேகரிக்கப்படுகிறது

ரத்தம் கொடுப்பவர்கள் தொடர்ந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்பவரா, இரவு தூங்கினீர்களா உள்ளிட்ட 20 அடிப்படைக் கேள்விகளைக் கேட்க வேண்டும். அடுத்ததாக ஹீமோகுளோபின், ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு ஆகியவற்றின் அளவை சரிபார்க்க வேண்டும்.

ரத்ததானம் செய்ய விரும்புவோர் 48 மணி நேரத்திற்கு முன்பு வரை எந்த போதைப் பொருளையும் எடுத்திருக்க கூடாது. ரத்த தானத்தின் போது 350 மில்லி மட்டுமே எடுக்கப்படுகிறது.

அதில் 3 மில்லியை எடுத்துத் தனி ரத்தப் பையில் சேகரிக்க வேண்டும். அதை சோதனைக் குழாயில் செலுத்தி 5 வகையான பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். உடலில் இருந்து இரத்தம் எடுக்க 30 நிமிடங்கள் போதுமானது.

ஒருவர் தானமாகக் கொடுக்கும் ரத்தத்தின் மூலம் 3 பேரைக் காப்பாற்ற முடியும். கொடையாளி அளிக்கும் ரத்தம் சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், தட்டணுக்கள் என்று மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. இவற்றைத் தனித்தனியாகப் பெறும் நோயாளிகள் மூவர், காப்பாற்றப்படுகின்றனர்.

ரத்த சிவப்பணுக்கள் (Redcells) – 35 நாட்கள் வரை கெடாமல் இருக்கும் – 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பத்தில் பதப்படுத்த வேண்டும்.

தட்டணுக்கள் (Platelets) – 5 நாட்கள் – 22 டிகிரி செல்சியஸ்

ரத்த வெள்ளையணுக்கள் (Plasma)- 1 ஆண்டு – மைனஸ் 30 டிகிரி செல்சியஸ்

ரத்த தானம் நன்மைகள்

ரத்த தானம் செய்வதால் உடலில் இயற்கையாகப் புதிய ரத்தம் உற்பத்தியாகும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சீராக இருக்க உதவும். மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பும் குறையும். உடலில் அதிக அளவில் உள்ள இரும்புச்சத்து சமன் செய்யப்படும்.

இதையும் படிக்கலாம் : விஷமாகும் குடிநீர் பாட்டில்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *