அதிகாலை வேலை எழுவது பல நன்மைகளைக் கொண்டுள்ளது என்பதை சாஸ்திரங்களும், விஞ்ஞா னமும் கூறுகின்றன. வைகறைப் பொழுதில் போது பூமியை வந்தடையும் சூரியக் கதிர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. அவை நம் உடலில் படும்போது, அவை நரம்புகளுக்கு புதிய ஆற்றலையும் உற்சாகத்தையும் தருகின்றன. கண்கள் ஆரோக்கியத்தையும், உடல் வலிமையையும் பெறுகின்றன. அதனால் தான் நமது முன்னோர்கள் சூரிய நமஸ்காரத்தை சிறந்த வழிபாடு என்று சொன்னார்கள்.
சனிக்கிழமை அன்று அதிகாலை நேரத்தில் சனி பகவானின் கிரகணம் மிகவும் சக்தி வாய்ந்தது, எனவே இந்த நாளில் எண்ணெய் குளியல் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அதிகாலை எழுந்திருப்பது உடலை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். மன அழுத்தம் அல்லது பரபரப்பு இல்லாமல் விஷயங்கள் சிறப்பாக நடக்கும். காலையில் கண் விழிப்பது உடலுக்கும் உள்ளத்துக்கும் ஊட்டம். உஷாஸ் என்ற பெண் தெய்வத்தைப் பற்றி ரிக்வேதத்தில் உஷாத்காலம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவள் தோன்றினால் தான் சூரியன் உதிக்கும்.
அதனால் தான் அதிகாலை உஷத் காலம் என்று அழைக்கப்படுகிறது. விடியற்காலையில் தேவதையின் செழுமையான கதிர்கள் பூமியின் மீது பாய்ந்ததால் தான், அந்த வேளையில் நீரில் மூழ்கி நீராடு தல்விசேசமாக சொல் லப்படுகிறது. இதனால் காலையில் தண்ணீரும் வெதுவெதுப்பாக காணப்படுகிறது. அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்று நமது சாஸ்திரங்கள் அறிவுறுத்துகின்றன.
பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 3 மணி முதல் 5 மணி வரை தான்.
இதையும் படிக்கலாம் : துளசி பூஜை செய்வது எப்படி?