அம்பிகையின் முகத்தில் இருந்து உருவானவள் பிரம்மி. மேற்கு திசையின் அதிபதி. கல்விக்கு அதிபதியான சரஸ்வதி என்ற கலைவாணியின் அம்சமாவாள்.
நான்முகனின் அம்சமாய்த் தோன்றியவள். நான்கு முகங்கள், நான்கு கரங்கள். மஞ்சள் வண்ணம் பிடித்த வண்ணம். கமண்டலம், அக்ஷமாலையைப் பின்னிரு கரங்களில் ஏந்தி முன்னிரு கைகளில் அபயவரதம் காட்டுவாள். ருத்திராக்ஷ மாலை தரித்து அன்னவாகனத்தில் அமர்ந்திருப்பவள். மான் தோல் அணிந்திருப்பவள்.
ஞானம் தந்து அஞ்ஞானம் நீக்குபவள். ப்ராம்மி காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை மேற்கு நோக்கி மாணவர்கள் அமர்ந்து படித்து வந்தால் ஞாபக மறதி நீக்குவதோடு வெற்றி நிச்சயம்.
காயத்ரி மந்திரம்
ஓம் ப்ரம்ஹ சக்தியை வித்மஹே
தேவர்ணாயை தீமஹி
தன்னோ ப்ராம்ஹி ப்ரசோதயாத்.
தியான சுலோகம்
தண்டம் கமண்டலும் சச்சாத் அஷஸீத்ரமதா பயம்
பிப்ரதி கனகச்யா ப்ராஹீ க்ருஷ்ணா ஜீனோஜ்வலா.
மந்திரம்
ஓம் ப்ராம் ப்ராம்ஹ்யை நம:
ஓம் ஆம் க்ஷாம் ப்ராம்ஹீ கன்யகாயை நம:
இதையும் படிக்கலாம் : மகேஸ்வரி – சப்த கன்னியர்