குளிர்சாதனப் பெட்டி இல்லாத பழங்காலத்தில் மண்பானையில் தான் தண்ணீர் ஊற்றி வைத்து அனைவரும் பயன்படுத்தினர். பிளாஸ்டிக், ஸ்டீல் பாத்திரத்தைப் பயன்படுத்தி தண்ணீர் குடிப்பதைவிட மண்பானையை உபயோகித்தால் உடல் நலத்திற்கு ஆரோக்கியம் உண்டாகும்.
மண் பானை ஒரு மிகச் சிறந்த தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி. மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து 2 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண் பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது. எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த தண்ணீர் சுத்திகறிக்கும் கருவி மண் பானை ஆகும்.
இயற்கையாகவே பானைகளில் உள்ள நீர் குளிர்ச்சியடைகிறது. மேலும் தண்ணீரின் சுவையும் அதிகரிக்கும். ஏனெனில் மண் பானையில் உள்ள மண் தண்ணீரை உறிஞ்சி வெளியே அனுப்புகிறது. பானையில் தண்ணீர் குடிப்பதால் உடலில் வளர்சிதை மாற்றம் ஏற்படும். மேலும் இதில் உள்ள தாதுக்கள் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
ஃப்ரிட்ஜ்யில் வைக்கப்பட்ட குளிர்ந்த தண்ணீரை அருந்தும் போது சில பின்விளைவுகள் ஏற்படும். மண் பானை நீர் எந்த பக்கவிளைவுகளுமற்றது. குறிப்பாக சளி, இருமல், தொண்டை வறட்சி, ஆஸ்துமா, தொண்டை புண் போன்ற பிரச்னைகளுக்கு பானை நீர் சிறந்த தேர்வு.
மண்பானை தண்ணீரின் நன்மைகள்
மண்பானையில் சேமிக்கப்படும் தண்ணீரிலிருந்து கிடைக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நம்முடைய உடலில் உள்ள குளுக்கோஸின் அளவைப் பராமரிக்க உதவுகிறது. அது உடலையும் குளிரூட்டச் செய்யும்.
பானை தண்ணீர் தொண்டைக்கு இதமாகவும், மென்மையாகவும் இருக்கும். இதனால் சளி இருமல் உள்ளவர்கள் கூட இதனை பயப்படாமல் அருந்தலாம்.
மண் பானையில் தண்ணீர் குடிப்பதால் டெஸ்டோஸ்டிரோன் அளவை சமன் செய்ய உதவுகிறது. இது உடலின் வளர்சிதை மாற்றத்தை (Metabolism) மேம்படுத்த உதவுகிறது.
பானை தண்ணீரில் இயற்கையாக இருக்கும் ஆல்கலைன் நம்முடைய உடலின் நீர்ச்சத்தைத் தக்க வைத்துக் கொள்ள உதவுகின்றன. அதனால் தான் மண் பானை குடிநீரைக் குடிக்கும்போது தாகம் தீர்ந்ததாக உணர்கிறோம்.
மண் பானையில் தண்ணீர் அருந்துவதால் மெட்டபாலிசத்தை தூண்டி அதன் வளர்ச்சியை அதிகரிக்கும். இதில் இருக்கும் மினரல்கள் ஜீரண சக்தியையும் அதிகரிக்கும்.
மண் பானை தண்ணீரில் கனிமச் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் கோடை காலத்தில் இருக்கும் அதிகப்படியான வெம்மையின் காரணத்தால் சரும நோய்கள் முதல் அம்மை முதலிய பல உடல் சார்ந்த பிரச்சினைகளை சரி செய்கின்றது.
இதையும் படிக்கலாம் : தேங்காய் பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
மண்பானை பயன்படுத்தும் முறை
புதிதாக மண்பாண்டம் வாங்கும்போது, முதன்முதலில் ஊற்றும் நீரை குடிக்கக் கூடாது. ஒரு வாரம் தண்ணீர் மாற்றி மாற்றி ஊற்றிய பின்னர், தினசரி குடிக்க ஆரம்பிக்கலாம்.
வீட்டில் மணல் பரப்பி அதன் மேல் பானை வைத்து குடிநீரை ஊற்றி வைத்துக் குடியுங்கள். அடிக்கடி மணல் ஈரப்பதத்துடன் இருக்கிறதா என பார்க்க வேண்டும். ஏனெனில் அப்போது தான் நீர் குளுர்ச்சியாக இருக்கும். கோடை வெப்பத்திற்கு இதமாக இருக்கும்.
சனிபகவான் அருள்
மண்ணை குறிக்கும் கிரகம் சனைஸ்வரன் எனும் சனீஸ்வர பகவானாவார். மண்ணில் உதித்த உயிர்களெல்லாம் மண்ணோடு மண்ணாக மாறுவதை குறிக்கும் வகையில் ஆயுள் காரகன் என்றும் அழைக்கப்படுகிறார்.
குயவர்கள் எனப்படும் மண்பாண்டம் செய்வோர் கடின உழைப்பாளிகள் மற்றும் சனியின் காரகம் பெற்றவர் ஆவர். எனவே மண்பாண்டங்களுக்கு செய்யும் செலவு சனீஸ்வர பகவானுக்கு செய்யும் பரிகாரம் என்பதால் ஆயுள் காரகனின் அருள் கிட்டும் என்பது நிதர்சனம்,
மண்பானை குடிநீர் உபயோகிப்பது மண்ணின் காரகனான சனீஸ்வரனுக்கும் பஞ்ச பூதங்களுக்கும் செய்யும் நன்றிகடனாகும்.
இதையும் படிக்கலாம் : பொடுகு தொல்லை நீங்க, இந்த பொருளை ட்ரை பண்ணி பாருங்க