தேங்காய் பூ சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்..

தேங்காய் பூவை நீங்கள் பார்த்திருப்பீர்களா என்று தெரியாது. ஆனால் இது எப்படி செய்யப்படுகிறது என்று நிறைய பேருக்குத் தெரியாது. நன்கு முற்றிய தேங்காயில் இருந்து உண்டாகுகின்ற தேங்காயின் கருவளர்ச்சி தான் தேங்காய் பூ.

அப்படி என்ன தேங்காய் பூவில் இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். தேங்காயிலும் தேங்காய் தண்ணீரிலும், இளநீரிலும் எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது என்பது நமக்குத் தெரியும். அதைவிட மிக அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள் தேங்காய் பூவில் உண்டு.

தேங்காய் பூவில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. அதில் உள்ள மூலக்கூறுகள் பல பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய உயிரைப் பறிக்கும் கொடிய நோய்களுக்கும் மருந்தாக அமைகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

தேங்காய் பூவில் மிக அதிக ஊட்டச்சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி இருமடங்கு அதிகரிக்கும். பருவ கால தொற்று நோய்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை தேங்காய் பூ கொடுக்கும்.

சக்தி தரும்

மன அழுத்தம் அல்லது வேலைப்பளு அதிகம் இருப்பவர்கள் தேங்காய் பூவை சாப்பிட்டால் முழு எனர்ஜி கிடைப்பதோடு நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும் அளவிற்கு மேஜிக் தேங்காய் பூவில் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? ட்ரை பண்ணிப் பாருங்களேன்.

ஜீரண சக்திக்கு

ஜீரண சக்தி குறைவாக இருந்தால் தேங்காய் பூ சிறந்த சாய்ஸ் ஆக இருக்கும். இதிலுள்ள மினரல், விட்டமின் உங்கள் குடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. மலச்சிக்க்லை குணமாக்குகிறது.

சர்க்கரை வியாதிக்கு

தேங்காய் பூ இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. இதனால் ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை கட்டுபடுத்த இயலும்.

இதயம்

இதயத்தில் படியும் கொழுப்பை கரையச் செய்கிறது. ரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பை கரைக்கிறது. இதய நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும்.

தைராய்டு

தைராய்டு பிரச்சனையில் பாதிக்கப்பட்டிருந்தால் தேங்காய் பூவை சாப்பிடுங்கள். இது தைராய்டு சுரப்பை ஒழுங்குபடுத்துகிறது. தைராய்டு பாதிப்பை குணப்படுத்துகிறது.

புற்று நோய்

ஃப்ரீ ரேடிகல்ஸை வெளியேற்றுகிறது. செல்களை பாதுகாக்கிறது. புற்று நோய் வராமல் காக்கிறது.

உடல் எடை

உடல் எடையை கட்டுக் கோப்பாக வைத்திருக்க உதவுகிறது. இதில் குறைந்த அளவு கலோரி இருப்பதால் உடல் எடை குறைய உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதால் கொழுப்பு சேராமால் வேகமாக உடல் எடை குறையும்.

சிறுநீரகம்

சிறுநீரக பாதிப்பை குறைக்கிறது. சிறுநீரக தொற்று நோய்களை குணப்படுத்தும். நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியமான சிறுநீரகத்தை பெறலாம்.

முதுமை

தேங்காய் பூவில் முக்கியமான முதுமையை தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளது. சுருக்கங்கள், வயதான தோற்றம், சரும தொய்வு போன்றவை நம்மை நெருங்க விடாது. சூரியனால் உண்டாகும் சரும பாதிப்புகளை தடுக்கிறது.

இதையும் படிக்கலாம் : தேங்காய் பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *