தேங்காய் பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

தேங்காய் பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

தேங்காய் எந்த ரூபத்தில் இருந்தாலும் அது நமக்கு நன்மையைத் தான் தருகிறது. தேங்காயிலும் சரி, அதன் பாலிலும் சரி, பல நன்மைகள் அடங்கியுள்ளன.

  • தேங்காய் பால் தாய்ப்பாலுக்கு இணையானது.

இதில் புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உற்பட்ட தாது பொருட்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்துகள் என உடல் இயக்கத்துக்கு தேவைப்படும் அனைத்துச் சத்துக்களும் தேங்காயில் உள்ளன.

தேங்காய் பாலில் உள்ள லாரிக் ஆசிட் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவடைய செய்கிறது.

ஆன்டி மைக்ரோபியல் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி தன்மை கொண்ட தேங்காய் பால் நிமோனியா, டியூபர்குலோசிஸ் நோய் உண்டாக்கும் பாக்டீரியாவை கொல்கிறது.

இதில் உள்ள மூலப்பொருள்கள் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பதால் இதயம் ஆரோக்கியமாக இருக்க செய்கிறது.

உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் தொடர்ந்து தேங்காய் பால் குடித்தால் விரைவிலேயே பசியை அடங்கச் செய்யும். அதற்கு காரணம் தேங்காய் பாலில் அடங்கியுள்ள அதிகப்படியான நார்ச்சத்து இருப்பதால் இவை உடல் எடை குறைப்பிற்கு உதவி செய்யும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தேங்காய் பால் அதிகம் அருந்துபவர்களுக்கு வயதாவதால் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் நீங்கி, தோலில் பளபளப்பு தன்மையை அதிகம் கூட்டுகிறது.

தோலின் நிறத்தையும் கூட்டி, இளமை தோற்றத்தை தருகிறது கேரள மாநில மக்கள் பலரும் சரும பொலிவுடன் இருப்பதற்கு காரணம் அவர்கள் தினமும் தேங்காய் பால் அல்லது தேங்காயுடன் தொடர்புடைய உணவுகளை சாப்பிடுவதால் தான்.

தேங்காய் பால் உயர் இரத்த அழுத்தத்தை குறைத்து. இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகளை நீக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.

வயிற்றில் அல்சர் உள்ளவர்கள் தேங்காய் பால் குடிக்கும் போது அது வயிற்றிற்கு இதமான தன்மை அளிப்பதோடு புண்களையும் ஆற்றுகிறது.

இரும்புச் சத்து குறைபாடு இருப்பதால், உடலானது ஹீமோகுளோபின் அதிகரிப்பதை தடுத்து நிறுத்தும். இதனால் இரத்த அணுக்களில் போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்காமல், இரத்த சோகையை உண்டாக்கும்.

இரத்த சோகை ஏற்படுவதை தடுக்கும் இரும்பு சத்து தேங்காய் பாலில் உள்ளது. ஒரு கப் தேங்காய் பாலில், உடம்புக்கு அன்றாடம் தேவைப்படும் இரும்புச் சத்தில் 25 சதவீதம் கிடைத்து விடுகிறது.

கீல்வாதம் என்பது உடலின் ரத்தத்தில் யூரிக் அமிலங்களின் அதீத சேர்மானத்தால் உடலில் இருக்கும் மூட்டு பகுதிகளில் கடுமையான வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நோயாகும்.

செலினியம் எனப்படும் வேதிப்பொருள் இந்த கீல்வாத பிரச்னையை போக்கும் சக்தி பெற்றது.

செலினியம் தேங்காய் பாலில் அதிகமுள்ளது தினமும் தேங்காய் பாலை அருந்துபவர்களுக்கு கீல்வாத பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.

தேங்காய் பாலில் காணப்படும் மீடியம் செயின் ஃபாட்டி ஆசிட் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக அமைகிறது.

வயதின் காரணமாகவும், தசை நரம்புகளுக்கு போதிய சத்து கிடைக்க பெறாததனாலும் சிலருக்கு உடலின் பல பகுதிகளில் இருக்கும் தசைகள் நரம்புகள் போன்றவற்றில் இறுக்கம் ஏற்பட்டு மிகுந்த சிரமத்தை தருகிறது.

தேங்காய் பாலில் உள்ள ஆன்டி இன்ஃபிளமேட்டரி உள் வீக்கத்தை குறைத்து ஆர்த்ரிட்டிஸ், மூட்டு வலி, தசை வலியை போக்குகிறது.

வாரத்திற்கு குறைந்த பட்சம் மூன்று முறையாவது தேங்காய் பால் அருந்தி வருவது சிறந்தது.

பாலில் உள்ள லாக்டோஸூக்கு அலர்ஜி கொண்டவர்கள் தேங்காய் பால் குடித்து வரலாம். இவை செரிமானத்தை தூண்டி குடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

தேங்காயை பச்சையாகவோ அல்லது தேங்காய் பாலாகவோ பயன்படுத்தினால் சகலவிதமான நோய்களையும் குணமாகக்கும் சக்தி தேங்காய்க்கு உண்டு.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *