
கோயம்புத்தூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 120வது தொகுதியாக கோயம்புத்தூர் வடக்கு தொகுதி உள்ளது. இத் தொகுதி கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.
2007 ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பின் போது, கோயம்புத்தூர் கிழக்கு என அழைக்கப்பட்டு வந்த சட்டமன்றத் தொகுதியானது கோயம்புத்தூர்வடக்கு என பெயர்மாற்றம் அடைந்தது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
2011 | தா. மலரவன் | அதிமுக | 93,276 |
2016 | பி. ஆர். ஜி. அருண்குமார் | அதிமுக | 77,640 |
2021 | அம்மன் கி. அர்ஜுனன் | அதிமுக | 81,454 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,64,994 | 1,63,426 | 36 | 3,28,456 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- கோயம்புத்தூர் வடக்கு தாலுக்கா (பகுதி) -வீரகேரளம் (பேரூராட்சி)
- கோயம்புத்தூர் தெற்கு தாலுக்கா (பகுதி) வடவள்ளி (பேரூராட்சி), மருதமலை, கல்வீரம்பாளையம்.
- கோயம்பத்தூர் (மாநகராட்சி) வார்டு எண் 57 முதல் 72 வரை.
தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி