
கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 122வது தொகுதியாக கோயம்புத்தூர் தெற்கு தொகுதி உள்ளது. இத் தொகுதி கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.
2007ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பின் போது, அதுவரை கோயம்புத்தூர் மேற்கு என அழைக்கப்பட்டு வந்த சட்டமன்றத் தொகுதியானது கோயம்புத்தூர் தெற்கு என பெயர் மாற்றம் அடைந்தது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
2011 | இரா. துரைசாமி | அதிமுக | 80,637 |
2016 | அம்மன் கி. அர்ஜுனன் | அதிமுக | 59,788 |
2021 | வானதி சீனிவாசன் | பாஜக | 53,209 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,20,668 | 1,21,612 | 33 | 2,42,313 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
கோயம்புத்தூர் (மாநகராட்சி) வார்டு எண் 21 முதல் 47 வரை.
சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி