கம்பம் சட்டமன்றத் தொகுதி

கம்பம் சட்டமன்றத் தொகுதி தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 201வது தொகுதியாக கம்பம் தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1971 கி. பொ. கோபால் இந்திய தேசிய காங்கிரசு 34,483
1977 ஆர். சந்திரசேகரன் அதிமுக 34,902
1980 ஆர். டி. கோபாலன் அதிமுக 47,577
1984 எஸ். சுப்பராயர் அதிமுக 52,228
1989 நா. இராமகிருஷ்ணன் திமுக 52,509
1991 ஒ. ஆர். ராமச்சந்திரன் இந்திய தேசிய காங்கிரசு 59,263
1996 ஒ. ஆர். ராமச்சந்திரன் தமாகா 58,628
2001 ஒ. ஆர். ராமச்சந்திரன் தமாகா 56,823
2006 நா. இராமகிருஷ்ணன் மதிமுக 50,761
2011 நா. இராமகிருஷ்ணன் திமுக 80,307
2016 எஸ். டி. கே. ஜக்கையன் அதிமுக 91,099
2021 நா. இராமகிருஷ்ணன் திமுக 1,04,800

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,37,360 1,43,592 34 2,80,986

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

உத்தமபாளையம் வட்டம் (பகுதி)

தேவாரம், தே.மீனாட்சிபுரம், பண்ணைப்புரம், உத்தமபாளையம், மல்லிங்காபுரம், கோகிலாபுரம், இராயப்பன்பட்டி, அழகாபுரி, முத்துலாபுரம், சின்னஒவுலாபுரம், எரசக்கநாயக்கனூர், கன்னிசேர்வைபட்டி, எரசக்கநாயக்கனூர் மலை, வேப்பம்பட்டி மற்றும் சீப்பாலக்கோட்டை கிராமங்கள்.

தேவாரம் (பேரூராட்சி), பண்ணைப்புரம் (பேரூராட்சி), கோம்பை (பேரூராட்சி), உத்தமபாளையம் (பேரூராட்சி), அனுமந்தன்பட்டி (பேரூராட்சி), க.புதுப்பட்டி (பேரூராட்சி), கம்பம் (நகராட்சி), சின்னமனூர் (நகராட்சி) மற்றும் ஓடைப்பட்டி (பேரூராட்சி)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *