தருமபுரி சட்டமன்றத் தொகுதி          

தருமபுரி சட்டமன்றத் தொகுதி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 59வது தொகுதியாக தருமபுரி தொகுதி உள்ளது.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர் கட்சி

வாக்குகள்

1951 பி. ஆர். இராஜகோபால கவுண்டர் சுயேச்சை 7,262
1957 எம். கந்தசாமி கண்டர் இந்தியத் தேசிய காங்கிரசு 11,661
1962 ஆர். எஸ். வீரப்ப செட்டியார் சுயேச்சை 24,191
1965 ( இடைத்தேர்தல் )

டி. என். வடிவேல்கவுண்டர்

இந்தியத் தேசிய காங்கிரசு
1967 எம். எஸ். கவுண்டர் திமுக 36,258
1971 ஆர். சின்னசாமி திமுக 39,861
1977 பி. கே. சி. முத்துசாமி ஜனதா கட்சி 26,742
1980 எஸ். அரங்கநாதன் அதிமுக 33,977
1984 ஆர். சின்னசாமி திமுக 46,383
1989 ஆர். சின்னசாமி திமுக 32,794
1991 பி. பொன்னுசாமி இந்தியத் தேசிய காங்கிரசு 53,910
1996 கே. மனோகரன் திமுக 63,973
2001 கே. பாரி மோகன் பாமக 56,147
2006 எல். வேலுசாமி பாமக 76,195
2011 அ. பாஸ்கர் தேமுதிக 76,943
2016 பெ. சுப்ரமணி திமுக 71,056
2021 எசு. பெ. வெங்கடேசுவரன் பாமக 1,05,630

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம்

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம்

மொத்தம்

2022-ன் படி 1,30,747 1,28,251 112 2,59,110

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

தருமபுரி வட்டம் (பகுதி)

எச்சன அள்ளி, மூக்கனஅள்ளி, பாலவாடி, கடகத்தூர், ஏ.ரெட்டிஅள்ளி, பாப்பிநாய்க்கனஅள்ளி , அதகப்பாடி, தளவாய்அள்ளி, சோமேனஅள்ளி, பங்குநத்தம், கோணங்கிஅள்ளி, கும்பலப்பாடி, நத்ததஅள்ளி, தடங்கம், விருபாட்சிபுரம், ஏ.ஜெட்டிஅள்ளி, அதியமான்கோட்டை, பாலஜங்கமனஅள்ளி, நாகர்கூடல், நெக்குந்தி, எர்ரபையனஅள்ளி, ஏலகிரி, பாகலஅள்ளி, நல்லம்பள்ளி, லளிகம், மாதேமங்கலம், தின்னஅள்ளி, மிட்டாரெட்டிஅள்ளி, பூதனஅள்ளி, சிவாடி, பாளையம், டொக்குப்போதனஅள்ளி, போலனஅள்ளி, மானியதஅள்ளி, கம்மம்பட்டி, தொப்பூர் டி, கணிகாரஅள்ளி, கே.தொப்பூர் (ஆர்.எப்) வெள்ளேகவுண்டன்பாளையம் மற்றும் அன்னசாகரம், கிராமங்கள்.

தர்மபுரி (நகராட்சி).

பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *