எந்த ராசிக்கு எந்த திசையில் வீடு இருப்பது நல்லது..!

எந்தெந்த ராசிக்காரர்கள் எந்த திசையை நோக்கி இருக்கும் வீட்டில் இருப்பது நல்லது

நம் அனைவரும் வாழ்நாளில் ராசிக்கு எந்த திசையில் ஒரு சொந்த வீடு கட்டி, இந்த சமுதாயம் போற்றும் படி சீரும் சிறப்புமாக வாழ்வதுதான் கனவாக இருக்கும். வீட்டை கட்டி பார், கல்யாணம் செஞ்சி பார் என்ற வார்த்தையை நாம் கேள்விப் பட்டிருப்போம்.

அதன் படி வீடு கட்டுவது எளிதான விஷயம் கிடையாது. வாஸ்து மற்றும் ராசியின் திசையில் கட்டுவதன் மூலம் நாம் குடுப்பதுடன் நிம்மதியாக வாழமுடியும்.

வடக்குத் திசைக்குப் குபேரனும், கிழக்குத் திசைக்கு ஆதித்தனும், தெற்குத் திசைக்கு இயமனும், மேற்குத் திசைக்கு வருணனும் அதிபதிகளெனக் குறிப்பிடப்படுகிறார்கள்.

வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளுக்கு முறையே வாயு, ஈசன், அக்னி, பித்ரு ஆகியோர் அதிபதிகள். இந்து தத்துவங்களின் படி நிலம் உயிர்ப்புள்ள ஒன்றாகவே கருதப்படுகின்றது.

எந்தெந்த ராசிக்கு எந்த திசையில் வீட்டின் வாசல் அமைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு நாம் வீடு கட்டும் போதோ அல்லது வாடகை வீட்டிற்கு போகும் போதோ, நம் ராசிக்கு ஏற்ற வகையில் வாசல் அமைக்கப்பட்டிருக்கும் வீட்டில் நாம் குடியேறுவது நல்லது.

மேஷ ராசி

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு கிழக்கு திசை நன்மையை செய்யும் ஆனால் வடக்கு நல்லது செய்யாது.

ரிஷப ராசி

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு மேற்கு நன்மையை செய்யும் ஆனால் தெற்கு நல்லது செய்யாது.

மிதுன ராசி

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு வடக்கு நன்மையை செய்யும் ஆனால் தெற்கு நல்லது செய்யாது.

கடக ராசி

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு வடமேற்கு, தெற்கு நன்மையை செய்யும் ஆனால் வடக்கு நல்லது செய்யாது.

சிம்ம ராசி

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு கிழக்கு நன்மையை செய்யும் ஆனால் வடமேற்கு நல்லது செய்யாது.

கன்னி ராசி

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு வடக்கு நன்மையை செய்யும் ஆனால் தெற்கு நல்லது செய்யாது.

துலாம் ராசி

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு மேற்கு நன்மையை செய்யும் ஆனால் வடகிழக்கு நல்லது செய்யாது.

விருச்சிக ராசி

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு வடகிழக்கு, வடமேற்கு நன்மையை செய்யும் ஆனால் வடக்கு நல்லது செய்யாது.

தனுசு ராசி

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு வடகிழக்கு, கிழக்கு நன்மை செய்யும் ஆனால் தென்கிழக்கு நல்லது செய்யாது.

மகர ராசி

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு தென் கிழக்கு, மேற்கு நன்மையை செய்யும் ஆனால் கிழக்கு நல்லது செய்யாது.

கும்ப ராசி

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு தென்கிழக்கு நன்மை செய்யும் ஆனால் வடமேற்கு நல்லது செய்யாது.

மீன ராசி

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு வடமேற்கு, தெற்கு நன்மையை செய்யும் ஆனால் தென்கிழக்கு நல்லது செய்யாது.

இதையும் படிக்கலாம் : 12 ராசிகளும் அவற்றின் குணங்களும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *