ஒவ்வொரு மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷம் நடைபெறுகிறது. இந்த நேரத்தில் சிவபெருமானை வழிபட்டால் தோஷம் விலகி துன்பங்கள் நீங்கி நல்லது நடக்கும் என்பது நம்பிக்கை. பிரதோஷத்தின் போது நந்திக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டு அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்தால் பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும் ஒவ்வொரு மாதமும் எந்த கிழமைகளில், எந்த திதி சேர்க்கையுடன் பிரதோஷம் வருகிறது என்பதை பொருத்து பலன்கள் அமையும்.
திவ்ய பிரதோஷம் என்பது துவாதசி மற்றும் திரயோதசியும் சேர்ந்து தோன்றும் பிரதோஷம்.
இந்த பிரதோஷத்தை வழிபட்டால் முன் ஜென்ம பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இன்று மாலை சிவாலயங்களுக்கு சென்று திருவாசகம் பாடி, வில்வ இலை சாத்தி வழிபட்டு, 16 தீபம் ஏற்றி வழிபட்டால் பலன் கிடைக்கும் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம் : பிரதோஷ நாளில் சொல்ல வேண்டிய நந்தி ஸ்லோகம்..!