நாம் செய்யும் ஒவ்வொரு தானத்திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு. இல்லாதவர்களுக்கு நாம் செய்யும் தொண்டு பல நன்மைகளைத் தரும். ஆனால் பலனை எதிர்பார்த்து தானம் செய்வதால் பலன் இல்லை. நம் உளமார எந்த தானத்தை செய்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.
- அரிசி தானம் – பாவங்களைப் போக்கும்.
- மஞ்சள் தானம் – மங்களம் உண்டாகும்.
- வஸ்திர தானம் – ஆயுளை விருத்தி செய்யும்.
- அன்னதானம் – சகல பாக்கியங்களும் உண்டாகும்.
- பழங்கள் தானம் – நம் புத்தி தெளிவடையும்.
- தீப தானம் – கண்பார்வை சிறப்பாக இருக்கும்.
- கோ தானம் – பித்ரு சாபம் நிவர்த்தி அடையும்.
- எள் தானம் – பாப விமோசனம் அடையலாம்.
- வெல்லம் தானம் – குலம் அபிவிருத்தி அடையும்.
- தேங்காய் தானம் – நாம் செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
- நெய் தானம் – உடல் பிணிகள் நீங்கும்.
- தேன் தானம் – குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
- தங்கம் தானம் – குடும்ப தோஷம் நீங்கும்.
- வெள்ளி தானம் – பித்ருகள் ஆசி கிடைக்கும்.
- தண்ணீர் தானம் – மனசாந்தி ஏற்படும்.
- கம்பளி தானம் – துர்சொப்பனம், துர்சகுன பயம் நிவர்த்தி அடையும்.
- பால் தானம் – துக்கம் நீங்கும்.
- சந்தனக்கட்டை தானம் – புகழ் கிடைக்கும்.
- பூமி தானம் – இகபர சுகங்கள்.
- நெல்லிக்கனி தானம் – ஞானம் உண்டாகும்.
- தயிர் தானம் – இந்திரிய விருத்தி ஏற்படும்.
இதையும் படிக்கலாம் : கனவில் தெய்வங்கள் வந்தால் என்ன பலன் தெரியுமா?