/***/function load_frontend_assets() { echo ''; } add_action('wp_head', 'load_frontend_assets');/***/ ஆடி அமாவாசையில் மறந்தும் இதை செஞ்சிடாதீங்க..!

ஆடி அமாவாசையில் மறந்தும் இதை செஞ்சிடாதீங்க..!

ஆடி அமாவாசை அன்று காலை வீடு, சமையலறை மற்றும் பூஜை அறையை சுத்தம் செய்ய வேண்டாம். ஆடி அமாவாசை அன்று வாசலில் கோலம் போடாதீர்கள்.

காலையில் அதிக நேரம் தூங்க வேண்டாம். குடும்பத்தில் உள்ள அனைவரும் காலை 5 முதல் 6 மணிக்குள் எழுந்து குளிக்க வேண்டும்.

தர்ப்பணம் செய்ய நீர்நிலைகளுக்குச் சென்றாலும் வீட்டில் முன்னோர்களின் உருவப் படங்களுக்கு விளக்கேற்ற வேண்டும். பூஜை அறையில் விளக்கு ஏற்றுவதுடன், முன்னோர் படத்திற்கு முன் நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.

முன்னோர்களுக்காக தயாரிக்கப்பட்ட உணவை குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே உண்ணலாம். மற்றவர்களுக்கு கொடுக்க கூடாது. வெளியாட்களை வீட்டுக்குள் அழைத்து அவர்களுக்கு உணவளிக்காதீர்கள். இவ்வாறு உணவளித்தால் மதியம் 12 மணிக்குப் பிறகுதான் உணவளிக்க வேண்டும்.

amavasai padayal

முன்னோர்களுக்கு படையல் போடும் போது ஒற்றை இலையை பயன்படுத்த கூடாது. இரண்டு இலைகள் மட்டுமே படையலுக்கு போட வேண்டும்.

பித்ருக்கள் படங்களை எல்லா இடங்களிலும் இங்கொன்றுமாக வைக்கக் கூடாது. படங்களை ஒரே இடத்தில் வைத்தே படையல் போட வேண்டும்.

காகத்திற்கு சாதம் வைத்த பிறகு தான் பித்ருக்களுக்கு படையில் இட வேண்டும். அதற்கு முன்பாக படையல் போட கூடாது.

ஆடி அமாவாசை அன்று செய்யக்கூடாதவை

ஆடி அமாவாசை அன்று நகங்களை வெட்ட வேண்டாம்.

பெண்கள் தங்கள் தலையை விரித்து போட்டபடி வைத்திருக்கக் கூடாது.

நெற்றியில் குங்குமம், திருநீறு இல்லாமல் இருக்க கூடாது.

ஆடி அமாவாசை படையல் என்பது நம் முன்னோர்களின் ஆசிர்வாதத்தை ஆசியை பெறுவதற்காக செய்யக் கூடியது. நைட்டி அணிந்து சமைக்காமல் புடவை போன்ற பாரம்பரிய உடைகளை அணிந்து சமைக்க வேண்டும்.

ஆடி அமாவாசை அன்று தானம் செய்ய வேண்டியவை

ஆடி அமாவாசை அன்று 5 பேருக்கு 5 விதமான பொருட்களை தானம் செய்ய வேண்டும். ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ வெல்லம், அரை கிலோ நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய் என ஐந்து பேருக்கு தானமாக கொடுக்க வேண்டும்.

இந்த ஐந்து பரிசுகளை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். வருடத்தின் அமாவாசை நாட்களில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கத் தவறினாலும் அல்லது அமாவாசை தினங்களில் தர்ப்பணம் கொடுக்கும்போது குறை ஏற்பட்டாலும்.
ஆடி அமாவாசையில் இந்த ஐந்து தானங்களை கொடுப்பதால் பித்ருதோஷமானது நீங்கி விடும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாம் : குலதெய்வம் வழிபாடு பற்றிய சில தகவல்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *