
எடப்பாடி சட்டமன்றத் தொகுதி சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 86வது தொகுதியாக எடப்பாடி தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1951 | கே. எஸ். அர்த்தநாதீஸ்வரா கவுண்டர் | இந்திய தேசிய காங்கிரசு | 15,368 |
1967 | ஏ. ஆறுமுகம் | திமுக | 36,935 |
1971 | ஏ. ஆறுமுகம் | திமுக | 35,638 |
1977 | இ. கணேசன் | அதிமுக | 31,063 |
1980 | இ. கணேசன் | அதிமுக | 37,978 |
1984 | கோவிந்தசாமி | இந்திய தேசிய காங்கிரசு | 68,583 |
1989 | எடப்பாடி க. பழனிசாமி | அதிமுக | 30,765 |
1991 | எடப்பாடி க. பழனிசாமி | அதிமுக | 72,379 |
1996 | இ. கணேசன் | பாமக | 49,465 |
2001 | இ. கணேசன் | பாமக | 74,375 |
2006 | வி. காவேரி | பாமக | 76,027 |
2011 | எடப்பாடி க. பழனிசாமி | அதிமுக | 1,04,586 |
2016 | எடப்பாடி க. பழனிசாமி | அதிமுக | 98,703 |
2021 | எடப்பாடி க. பழனிசாமி | அதிமுக | 1,63,154 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,44,042 | 1,39,625 | 27 | 2,83,694 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- எடப்பாடி வட்டம்
- மேட்டூர் வட்டம் (பகுதி)
வீரக்கல், குட்டப்பட்டி, மல்லிக்குட்டப்பட்டி, சின்னசோரகை, பெரியசோரகை, தாசகாப்பட்டி, வனவாசி, சூரப்பள்ளி, தோரமங்கலம், மற்றும் கரிக்காப்பட்டி கச்சுப்பள்ளி கிராமங்கள்.
நங்கவள்ளி (பேரூராட்சி), வனவாசி (பேரூராட்சி), ஜலகண்டாபுரம் (பேரூராட்சி) மற்றும் (கொங்கணாபுரம்)ஆவடத்தூர்.