
ஈனமிகுத் துளபிறவி – யணுகாதே
யானுமுனக் கடிமையென – வகையாக
ஞானஅருட் டனையருளி – வினைதீர
நாணமகற் றியகருணை – புரிவாயே
தானதவத் தினின்மிகுதி – பெறுவோனே
சாரதியுத் தமிதுணைவ – முருகோனே
ஆனதிருப் பதிகமரு – ளிளையோனே
ஆறுதிருப் பதியில்வளர் – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : அதி மதம் கக்க (காஞ்சீபுரம்) – திருப்புகழ் 309