எனை அடைந்த (திருத்தணிகை) – திருப்புகழ் 250 

எனைய டைந்த குட்டம் வினைமி குந்த பித்த
மெரிவ ழங்கு வெப்பு – வலிபேசா

இகலி நின்ற லைக்கு முயல கன்கு லைப்பொ
டிரும லென்று ரைக்கு – மிவையோடே

மனைகள் பெண்டிர் மக்கள் தமைநி னைந்து சுத்த
மதிம யங்கி விட்டு – மடியாதே

மருவி யின்றெ னக்கு மரக தஞ்சி றக்கு
மயிலில் வந்து முத்தி – தரவேணும்

நினைவ ணங்கு பத்த ரனைவ ருந்த ழைக்க
நெறியில் நின்ற வெற்றி – முனைவேலா

நிலைபெ றுந்தி ருத்த ணியில்வி ளங்கு சித்ர
நெடிய குன்றில் நிற்கு – முருகோனே

தினைவி ளங்க லுற்ற புனஇ ளங்கு றத்தி
செயல றிந்த ணைக்கு – மணிமார்பா

திசைமு கன்தி கைக்க அசுர ரன்ற டைத்த
சிறைதி றந்து விட்ட – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : ஏது புத்தி (திருத்தணிகை) – திருப்புகழ் 251 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *