
ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 99வது தொகுதியாக ஈரோடு மேற்கு தொகுதி உள்ளது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1996 | என். கே. கே. பெரியசாமி | திமுக | – |
2001 | கே. எஸ். தென்னரசு | அதிமுக | – |
2006 | என். கே. கே. பி. ராசா | திமுக | – |
2011 | கே. வி. இராமலிங்கம் | அதிமுக | 90,789 |
2016 | கே.வி.ராமலிங்கம் | அதிமுக | 82,297 |
2021 | சு. முத்துசாமி | திமுக | 1,00,757 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,44,821 | 1,51,166 | 39 | 2,96,026 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
பெருந்துறை தாலுகா (பகுதி)
வடமுகம் வெள்ளோடு, புங்கம்பாடி, கவுண்டச்சிபாளையம், தென்முகம் வெள்ளோடு மற்றும் முகாசி புலவன்பாளையம் கிராமங்கள்.
ஈரோடு தாலுக்கா (பகுதி)
கரை எல்லப்பாளையம், எலவமலை, மேட்டுநாசுவன்பாளையம், பேரோடு, நொச்சிபாளையம், கங்காபுரம், எல்லப்பாளையம், வில்லரசம்பட்டி, திண்டல் (மேல்), திண்டல் (கீழ்), கதிரம்பட்டி, ராயபாளையம், மொடகரை, கூரப்பாளையம், தொட்டாணி, புதூர், புதுப்பாளையம், நஞ்சனாபுரம், பவளத்தாம்பாளையம், வேப்பம்பாளையம் மற்றும் முத்தம்பாளையம் கிராமங்கள்.
சூரியம்பாளையம் (பேரூராட்சி), சித்தோடு (பேரூராட்சி), நசியனூர் (பேரூராட்சி), பெரியசேமூர் (பேரூராட்சி), சூரம்பட்டி (பேரூராட்சி) மற்றும் காசிபாளையம் (ஈ) (பேரூராட்சி).
மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி