விநாயகர் எளிமையானவர் அவருக்கு மிக எளிதில் கிடைக்கும் எருக்கம் பூவைச் சமர்ப்பித்தாலே போதும், அளவில்லா மகிழ்ச்சி அடைந்து எல்லையில்லா இன்பத்தை வரமாகத் தந்தருள்வார். இது மட்டுமன்றி, எருக்கம் பூ சூரிய கிரகத்துக்கு உரியது. இது, சகலவிதமான எதிர்மறை சக்திகளை விலக்கும் வல்லமை கொண்டது. ஆகவே பிள்ளையாருக்கு எருக்கம் பூ சமர்ப்பித்தால் காரியத் தடைகள் நீங்கும். ஜாதகத்தில் சூரியனின் நிலையால் உண்டாகும் பாதிப்புகளும் தோஷமும் விலகும். சூரிய பகவானின் அனுக்ரஹம் வாய்ப்பதால், ஆத்ம பலமும் ஆரோக்கியமும் உண்டாகும்.
எருக்கம் பூவை சமஸ்கிருதத்தில் அர்க்க மலர் என கூறுகிறார்கள். இதன் அர்த்தம் பிள்ளையாருக்கு உயர்ந்த மலர். ‘அர்க்கன்’ என்பதற்கு சூரியன் என்ற பொருளும் உண்டு. சூரியனார் கோயிலில் தலவிருட்சம் கூட எருக்கஞ்செடிதான் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல், திருஎருக்கத்தம்புலியூர், திருக்கானாட்டுமுள்ளூர் ஆகிய திருக்கோவில்களில் எருக்கஞ்செடியானது தலமரமாக இருக்கின்றது.
எருக்கஞ்செடியில் இரண்டு வகையான எருக்கஞ்செடிகள் அதிக அளவில் காணப்படுகின்றது. நீல எருக்கு, வெள்ளை எருக்கு. வெள்ளை எருக்கஞ்செடி அதிக இடங்களில் வளர்வதில்லை. நீல எருக்கஞ்செடியை அதிக அளவில் காணப்படுகின்றது.
விநாயகர் வழிபாட்டில் கத்தரிபூ நிற மலர், வெள்ளை நிற மலர் இவ்விரண்டு எருக்கம் பூவும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. வெள்ளெருக்கம் பூவை சிவனுக்கு அர்ச்சனை செய்ய பயன்படுத்துகின்றனர். காலையில் வெள்ளெருக்கம் பூவை கொண்டு பூஜை செய்தால் நல்ல பலனை பெறலாம்.
எருக்கம் பூவை பிள்ளையாருக்கு அணிவித்து வழிபடுவதன் மூலம் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும். தினமும் காலையில் எருக்கம் பூ கொண்டு விநாயகருக்கு பூஜை செய்துவர வீட்டில் உள்ள கஷ்டங்கள் நீங்கி பணவரவு செழிக்கும்.
வெள்ளை எருக்கம் கட்டையால் செய்யப்பட்ட பிள்ளையாரை வழிபடுவது வீட்டில் உள்ள எதிர்மறையான சக்திகளை அழித்து குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.
இதையும் படிக்கலாம் : விநாயகர் அகவல்