ஏவினை நேர்விழி மாதரை மேவிய
ஏதனை மூடனை – நெறிபேணா
ஈனனை வீணனை ஏடெழு தாமுழு
ஏழையை மோழையை – அகலாநீள்
மாவினை மூடிய நோய்பிணி யாளனை
வாய்மையி லாதனை – யிகழாதே
மாமணி நூபுர சீதள தாள்தனி
வாழ்வுற ஈவது – மொருநாளே
நாவலர் பாடிய நூலிசை யால்வரு
நாரத னார்புகல் – குறமாதை
நாடியெ கானிடை கூடிய சேவக
நாயக மாமயி – லுடையோனே
தேவிம நோமணி ஆயிப ராபரை
தேன்மொழி யாள்தரு – சிறியோனே
சேணுயர் சோலையி னீழலி லேதிகழ்
சீரலை வாய்வரு – பெருமாளே.
இதையும் படிக்கலாம் : ஓராது ஒன்றை (திருச்செந்தூர்) – திருப்புகழ் 37