எழுதிகழ் புவன (குன்றுதோறாடல்) – திருப்புகழ் 304 

எழுதிகழ் புவன நொடியள வதனி
லியல்பெற மயிலில் – வருவோனே

இமையவர் பரவி யடிதொழ அவுணர்
மடிவுற விடுவ – தொருவேலா

வழுதியர் தமிழி னொருபொரு ளதனை
வழிபட மொழியு – முருகேசா

மலரடி பணியு மடமகள் பசலை
மயல்கொடு தளர்வ – தழகோதான்

முழுகிய புனலி லினமணி தரள
முறுகிடு பவள – மிகவாரி

முறையொடு குறவர் மடமகள் சொரியு
முதுமலை யழக – குருநாதா

பழகிய வினைகள் பொடிபட அருளில்
படிபவ ரிதய – முறுகோவே

பருவரை துணிய வொருகணை தெரிவ
பலமலை யுடைய – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : தறையின் மானுடர் (குன்றுதோறாடல்) – திருப்புகழ் 305 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *