நுரையீரல் பலம் பெற சாப்பிட வேண்டிய உணவுகள்

healthy food for lungs

நுரையீரல் மூச்சுக் காற்றை இழுத்து வெளிவிடும் முக்கிய உடல் உறுப்புக்களில் ஒன்றாகும். நுரையீரலானது உடலியக்கத்திற்கு ஆற்றல் தரும் ஆக்சிசனை உள் எடுத்துக்கொள்வதற்கும் கார்பன்டைக்சைடு வளிமத்தை வெளியேற்றுவதற்கும் முக்கிய உறுப்பாக செயல்படுகிறது.

ஒரு நாளைக்கு சராசரியாக 22,000 முறை மூச்சு விடும் நாம், கிட்டதட்ட 255 கன மீட்டர் (9000 கன அடி) காற்றை உள்ளிழுத்து வெளியிடுகிறோம்.

தற்போது வந்திருக்கும் கொரோனா முதல் எந்த வைரஸாக இருந்தாலும் முதலில் பாதிப்பது நுரையீரல் தான். நுரையீரல் பாதிப்பால் தான் சளி, இருமல், காய்ச்சல் உண்டாகிறது.

இதனால் மூச்சுத் திணறலும் ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்னைகளிலிருந்து விடுபட நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் உணவுகள் பற்றி பார்க்கலாம்.

மஞ்சள்

மஞ்சள் ஒரு சிறந்த கிருமிநாசினி ஆகும். மஞ்சளில் உள்ள குர்குமின் எனும் வேதிப்பொருள் மஞ்சளுக்கு நிறத்தை அளிப்பதுடன், உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.
மஞ்சளில் நிறைந்திருக்கும் அழற்சி எதிர்ப்பு தன்மை, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்கிறது.

இதில் உள்ள ஆன்டி-செப்டிக் ஆனது நச்சுப்பொருட்களை தடை செய்யும் மேலும் உடலை கிருமிகள் அண்டாத வண்ணம் பாதுகாக்கின்றன. தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் தூள் சேர்த்து குடித்து வந்தால் வறட்டு இருமல் மற்றும் சுவாச கோளாறுகள் ஏற்படுவதை தடுக்கிறது.

இஞ்சி

இஞ்சி ஒர் பவுர்ஃபுல் ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகும். இவை நுரையீரலில் படிந்திருக்கும் கழிவுகளை அகற்றும். மேலும் நுரையீரல் வீக்கத்தைக் குறைக்கும் தன்மை உடையது.

இஞ்சியில் உள்ள ஜிஞ்ஜெரால் நுரையீரலில் இருக்கும் மியூகஸ் எனும் திரவத்தைக் குறைக்க கூடியது. மேலும் இவை சுவாசப் பாதையைச் சீராக்க கூடியது. எனவே இஞ்சியை டீ யாகவோ, ஜூஸ் யாகவோ சேர்த்து வருவது நுரையீரலை பலப்படுத்தும்.

பூண்டு

பூண்டு ஆனது இயற்கையாகவே உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்க கூடியவை. இதில் உள்ள அலிசின் சத்து ஒரு நேச்சுரல் ஆன்டி பையாட்டிக் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளை வெளிப்படுத்தி பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்றுகளிலிருந்து நுரையீரலைக் காக்கும். எனவே பூண்டினை உணவில் அடிக்கடியோ அல்லது பச்சையாகவோ சாப்பிட்டு வருவது சிறந்தது.

ஆப்பிள்

ஆப்பிளில் காணப்படும் கெல்லின் என்னும் பிளவனாய்டு காற்று பாதையை திறக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. மேலும் ஆப்பிளில் உள்ள ஆன்டி- இன்ஃப்ளாமெட்டரி என்ற வேதிப்பொருள் ஆஸ்துமா, அலர்ஜி போன்ற சுவாசப் பிரச்னைகள் ஏற்படாமல் தடுப்பதோடு , சீரான சுவாசத்துக்கு வழிவகுக்கிறது.

ஒமேகா 3

ஒமேகா 3 வகை உணவுகள் நுரையீரல் செயல்பாட்டைச் சீராக்கவும். நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க கூடியவை. பாதாம், வால்நட், பிளாக்ஸ் மற்றும் வெள்ளரி விதைகள், மீன்கள் போன்றவற்றில் ஒமேகா 3 சத்து நிறைந்து இருக்கிறது.

கீரை வகைகள்

கீரைகளில் உள்ள ஃபைட்டோ கெமிக்கல் ஆனது உடலில் ஆக்சிஜனேற்ற சேதம், நுரையீரல் வீக்கம் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது. எனவே தினமும் உணவில் ஒரு கப் கீரை சேர்த்து கொண்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, நுரையீரலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவுகிறது.

தண்ணீர்

தண்ணீரானது உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரக்கூடியதும். சரியான அளவு தண்ணீர் பருகுவது உடலின் மற்ற பகுதிகள் போல் நுரையீரலும் சிறப்பாக செயல்பட உதவும். உடல் நீர்ச்சத்துடன் இருப்பதால் நுரையீரலில் உள்ள ம்யூகோஸல் லைனிங் மெலிதாகி, நுரையீரல் சிறப்பாக செயல்பட உதவும்.

எனவே உடல் நீர்ச்சத்துடன் இருப்பது மிகவும் அவசியம். காய்ந்த நுரையீரலில் எரிச்சல் மற்றும் அதிக அழற்சியை ஏற்படுத்தும். எனவே தினமும் ஆறு முதல் எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

துளசி

துளசி சுவாச பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு தரும் ஒரு மூலிகை. துளசியை உட்கொள்வதால், காய்ச்சல், தலைவலி, இருமல் ஆகியவையும் குணப்படுத்துகிறது. துளசி ஆனது உடலில் உள்ள திசுக்களுக்கு தீவிர பாதிப்புகள் ஏற்படும் போது அதை சமாளிக்கும் ஆற்றலை அளிக்கிறது.

இவை உடலில் உள்ள செல்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கிறது. எனவே தினமும் பத்து துளசி இலைகளை மென்று சாப்பிட்டோ அல்லது துளசி டீ ஆகவும் குடிப்பது நல்லது, இதனால் நுரையீரல் பலப்படும்.

வைட்டமின் சி

உடலில் ஆக்சிஜனை முழுமையாகக் கடத்திச் செல்ல வைட்டமின் சி உதவுகிறது. நுரையீரலின் சீரான இயக்கத்திற்கும் ஆஸ்துமா, பிரான்சிடிஸ் போன்ற பிரச்னைகளின் தீவிரத்தைக் குறைக்கும்.

நெஞ்சக நோய் தொடர்பான பிரச்னைகளின் வீரியம் குறையும். இவற்றில் கொய்யா, ஆரஞ்சு, கிவி, எலுமிச்சை, சாத்துகுடி, மாதுளை, பைன் ஆப்பிள் போன்றவை நுரையீரலின் பாதுகாவலராக செயல்படுகிறது.

புரோகோலியில் வைட்டமின் சி, கரோடேனாய்டு, போலேட் மற்றும் பைடோ கெமிக்கல் அதிகமாக இருப்பதால். இவை நுரையீரலில் ஏற்படும் சேதாரத்தை தடுக்கிறது. மேலும் இதில் எல்-சல்போராஃபேன் அடங்கியுள்ளதால், சுவாசப்பிரச்சனைகளை தடுக்கும், அழற்சியை எதிர்க்கும் ஜீன்களை உருவாகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *