உடல் இயக்கங்கள் அனைத்தும் சரி வர இயங்க தேவையானதாக இருப்பது இரத்தம் தான். இந்த இரத்தம் உடலுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். உணவில் இரும்புச்சத்து அதிகமாக இருந்தால், ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும்.
பொதுவாக ஆண்களுக்கு ஹீமோகுளோபின் 14 – 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 – 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். ஆனால் பலருக்கு இந்த இரத்தின் அளவானது 4-க்கு கீழ் எல்லாம் கூட இருக்கிறது
உடலில், ஹீமோகுளோபின் அளவு குறையும் போது, தலைவலி, மயக்கம்,களைப்பு, உடல் சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு.
ஹீமோகுளோபின் அளவை இயற்கையாகவும் மிகவும் எளிமையாகவும் தினசரி சாப்பிடும் உணவுகளின் மூலமாகவே அதிகரிக்கலாம்.
மாதுளை பழம்
மாதுளைப்பழத்தில் இரும்புச்சத்து, கால்சியம், புரதம், கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும், ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும். மேலும் 100 கிராம் பழத்தில், 0.30 மில்லி கிராம் இரும்புச்சத்து இருக்கிறது.
தினமும் மாதுளையை பழமாகவோ, ஜூஸாகவோ சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
பேரிட்சை பழம்
பேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து ஏராளமாக உள்ளது. மேலும் 100 கிராம் பேரீச்சையில் 277 கலோரிகள், 0.90 மி.கி இரும்புச்சத்து இருக்கிறது. இவை உடலில உள்ள இரத்த சிவப்பணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த உதவும். இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் மற்றும் மினரல் நிறைந்த இந்தப் பழம் நரம்புத்தளர்ச்சியைப் போக்கும்.
உலர்ந்த முந்திரிப்பழம், பேரீட்சை பழம், உலர் திராட்சை மூன்றையும் இரவு முழுவதும் பாலில் ஊற வைத்து, மறுநாள் காலையில் பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை ஏற்படாது.
இதையும் படிக்கலாம் : தூக்கமின்மைக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்
முருங்கைக் கீரை
கீரைகளை பொதுவாக உணவில் சேர்த்து கொள்வது சிறந்தது அதிலும் முருங்கைக் கீரையை வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து, பொட்டாசியம், சோடியம், கால்சியம் போன்ற உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் நிறைத்து இருக்கின்றன.
ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி இதனுடன் 5 பல் பூண்டு, 5 மிளகு மற்றும் சிறிது சீரகம் பொடி போட்டு தினமும் மதிய உணவு வேலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து உடலை சீராக வைத்துக் கொள்ளும்.
பீட்ரூட்
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க பீட்ரூட் அதிகமாக பரிந்துரைக்கப்படுகிறது. காரணம் பீட்ருட்டில் அதிகப்படியான இரும்பு, ஃபோலிக் அமிலம், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளது.
இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.
முந்தைய நாள் இரவில் ஒரு பீட்ரூட்டை இரண்டாக வெட்டி அதை நீரில் போட்டு வைக்க வேண்டும். இந்த நீரை காலையில் குடித்து வந்தால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். பீட்ரூடை பிரெஷ் ஜூஸ் ஆகவும் குடித்து வரலாம்.
அத்திப்பழம்
அத்திப்பழம் இரத்த விருத்திக்கு முழுப்பலன் அளிக்கிறது. மேலும் 100 கிராம் அத்திப்பழத்தில் இரண்டு மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது.
தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் ரத்த உற்பத்தியை அதிகரிப்பதோடு, ரத்தப்போக்கைக் கட்டுபடுத்தும் வல்லமை கொண்டது.
இதில் உள்ள க்ளோரோஜெனிக் அமிலம் உடலில் உள்ள இன்சுலினை அதிகரிக்கச் செய்து, சர்க்கரையைக் குறைக்கும். இவற்றில் நார்ச்சத்தும் நிறைந்திருப்பதால், மலச்சிக்கல் பிரச்னைகளில் இருந்து விடுபடலாம்.
தினமும் இரவு அரை டம்ளர் தண்ணீரில் உலர்ந்த அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும்.
கருப்பு திராட்சை
கருப்பு திராட்சையில் ஆந்தோசயனின் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் உள்ளன. திராட்சைக்கு வெள்ளையணுக்களின் உற்பத்தியை பெருக்கும் ரசாயனங்கள் அதிகம் உள்ளன. மேலும் 100 கிராம் உலர்ந்த திராட்சையில் 23 சதவிகிதம் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
மேலும் படிக்க : செவ்வாழை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
செம்பருத்தி பூ
செம்பருத்தி பூ இரத்தத்தில் இரும்புச் சத்தை அதிகரிப்பதோடு, இரத்த சோகை நோயை குறைகிறது.
தினமும் 6 செம்பருத்தி பூவை எடுத்து அதில் உள்ள மகரந்தத்தை நீக்கி. ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அந்த நீரில் அந்த பூவை போட்டு மூடி வைக்கவேண்டும்.
சிறுது நேரம் கழித்து அந்த நீரை வடிகட்டி குடிக்கவேண்டும்.இவ்வாறு செம்பருத்தி பூ நீரை காலை மாலை என இரு வேலை குடித்து வந்தால் விரைவில் ரத்தம் அதிகரிக்கும்.
இதற்கு 5 இதழ் கொண்ட செம்பருத்தி பூவை தான் பயன்படுத்த வேண்டும்.