கனமாய் எழுந்து (பழனி) – திருப்புகழ் 143 

கனமா யெழுந்துவெற் பெனவே யுயர்ந்துகற்
புரமா ரணந்துளுத் – திடுமானார்

கனிவா யுகந்துசிக் கெனவே யணைந்துகைப்
பொருளே யிழந்துவிட் – டயர்வாயே

மனமே தளர்ந்துவிக் கலுமே யெழுந்துமட்
டறவே யுலந்துசுக் – கதுபோலே

வசமே யழிந்துவுக் கிடுநோய் துறந்துவைப்
பெனவே நினைந்துனைப் – புகழ்வேனோ

புனவே டர்தந்தபொற் குறமா துஇன்புறப்
புணர்கா தல்கொண்டஅக் – கிழவோனே

புனலே ழுமங்கவெற் பொடுசூர் சிரங்கள்பொட்
டெழவே லெறிந்தவுக் – கிரவீரா

தினமே வுகுங்குமப் புயவா சகிண்கிணிச்
சிறுகீ தசெம்பதத் – தருளாளா

சிவலோ கசங்கரிக் கிறைபால பைங்கயத்
திருவா வினன்குடிப் – பெருமாளே.

இதையும் படிக்கலாம் : கார் அணிந்த (பழனி) – திருப்புகழ் 144 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *