கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதி

கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 178வது தொகுதியாக கந்தர்வக்கோட்டை தொகுதி உள்ளது.

சென்னை மாநிலம்

ஆண்டு கட்சி வெற்றி பெற்றவர்
1957 இந்திய தேசிய காங்கிரசு ஆர். கிருஷ்ணசாமி கோபாலர்
1962 இந்திய தேசிய காங்கிரசு ஆர். கிருஷ்ணசாமி கோபாலர்
1967 இந்திய தேசிய காங்கிரசு ஆர். ஆர். துரை
1971 திமுக துரை கோவிந்தராசன்

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள்
2011 என். சுப்பிரமணியன் அதிமுக 67,128
2016 பா. ஆறுமுகம் அதிமுக 64,043
2021 மா. சின்னதுரை இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) 69,710

வாக்காளர்களின் எண்ணிக்கை

வருடம் ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினம் மொத்தம்
2022-ன் படி 1,00,509 99,821 18 2,00,348

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • கந்தர்வகோட்டை தாலுக்கா
  • குளத்தூர் தாலுக்கா (பகுதி)

செட்டிபட்டி, வெள்ளைபிள்ளையார்பட்டி, கண்ணன்குடி, செங்கலூர், காட்டுக்கோட்டைபட்டி, கிள்ளுக்கோட்டை, உலகன்காத்தான்பட்டி, கிள்ளுக்குவளவாய்ப்பட்டி, ராகத்தான்பட்டி, கீழையூர், விசலூர், புலியூர், கீரனூர், நஞ்சூர், மருதூர், வலியம்பட்டி, ஒடுகம்பட்டி, உடையாளிப்பட்டி, குன்னாண்டார்கோயில், தெம்மாவூர், மின்னாத்தூர், வத்தனாக்கோட்டை, பெரம்பூர், கிள்ளனூர், வீரக்குடி, கடம்பவயல், மங்கத்தேவன்பட்டி, பிரகதாம்பாள்புரம், நார்த்தமலை, அம்மாசத்திரம், உப்பிலியக்குடி, வாழங்களம், சீமானூர், சினையக்குடி, அண்டக்குளம், சாத்தினிப்பட்டி, வைத்தூர், சிரங்கன்பட்டி, உச்சணி, தென்னங்குடி, மூட்டாம்பட்டி, நரங்கியன்பட்டி, வத்தனாக்குறிச்சி, துடையூர், சத்தியமங்கலம், இறம்பாளி, மேலூர், வெள்ளனூர், முட்டுக்காடு, வேங்கைவயல் மற்றும் பூங்குடி கிராமங்கள்.

கீரனூர் (பேரூராட்சி).

கறம்பக்குடி தாலுகா (பகுதி) தட்டாமணைப்பட்டி, கீரத்தூர், கிளாங்காடு, முதலிப்பட்டி, செங்கமேடு, கல்லுமடை, பாப்பாபட்டி, ரெகுநாதபுரம், புதுவிடுதி, பெயாடிப்பட்டி, திருப்பாகோவில், ஒடப்பவிடுதி, சின்னன்கோன்விடுதி, வாண்டான்விடுதி, அலகன்விடுதி,மணமடை,பண்டுவக்கோட்டை, மருதங்கோன்விடுதி, மயிலன்கோன்பட்டி, கறும்பவிடுதி, அம்புகோவில், பிலாவிடுதி, தீத்தான்விடுதி, குளந்திரான்பட்டு,பட்டமாவிடுதி, செவ்வாய்ப்பட்டி மற்றும் ரங்கியன்விடுதி கிராமங்கள், கறம்பக்குடி (பேரூராட்சி).

விராலிமலை சட்டமன்றத் தொகுதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *