விநாயக சதுர்த்தி விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. பொதுவாக விநாயகரின் பிறந்தநாளாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு, விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18, 2023 திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது.
விநாயகரை வழிபடும் முறை
அதிகாலையில் எழுந்து வீட்டை சுத்தம் செய்து, நாமும் குளித்து முடித்து சுத்தமாக சென்று விநாயகர் சிலையை வீட்டிற்கு வாங்கி வர வேண்டும். சிலையை சிவப்பு அல்லது மஞ்சள் துணியால் மூடி, வைக்கவும்.
விநாயகர் சிலையை வீட்டின் வட கிழக்கு திசையிலேயே வைக்க வேண்டும். விநாயகர் சிலை, மேற்கு நோக்கி இருக்கும் வகையிலேயே வைக்க வேண்டும்.
அதன் பிறகு விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை காய்ச்சிய பால், சுண்டல், அப்பம் மற்றும் சர்க்கரை பொங்கல் என இவை அனைத்தினையும் செய்து வழிபடலாம்.
அதோடு தேங்காய், வாழைப்பழம், வெற்றி மற்றும் பாக்கு என இதனையும் வைத்து விட வேண்டும். மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களில் எதை வேண்டுமானாலும் செய்து வழிபடலாம். மேலும் அன்று அருகம்புல் மற்றும் எருக்கம் பூ இருந்தாலும் வைத்து வழிபடலாம். இத்தகைய பொருட்களை எல்லாம் செய்த முடித்த பிறகு சாம்பிராணி போட்டு தேங்காய் உடைத்து வழிபடுங்கள்.
விநாயகர் பூஜை வழிபாட்டிற்கு பிறகு 3 நாட்கள் கழித்த பிறகு மஞ்சள் அல்லது களிமண்ணால் செய்த விநாயகரை நீரில் கரைத்து விடுங்கள். இவ்வாறு வழிபடுவதன் மூலம் மனதில் உள்ள கஷ்டங்கள் நீங்கி நல்ல வழி உண்டாகும் என்பது ஐதீகம்.
இதையும் படிக்கலாம் : விநாயகர் சிலைகளை ஆற்றில் கரைப்பது ஏன்?