காயத்திரி என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று. ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது.
காயத்ரிமந்திரத்தை இந்த பூமிக்கு அறிமுகப்படுத்தியவர் விஸ்வாமித்திரர். அவர் ஆகாயத்தில் சூட்சும ஒலியாக தியான நிலையிலிருந்து இதனைக் கண்டறிந்தார்.
காயத்திரி மந்திரம்
ஓம் பூர் புவ: ஸ்வ: தத்ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத்
இந்த காயத்ரி மந்திரத்திரத்திற்கு மேலான மந்திரம் உலகில் கிடையாது. அந்தப் பரம ஜோதி சொரூபமான சத்தியத்தை நாம் தியானிக்கிறோம். பூ உலகம், மத்திய உலகம், மேல் உலகம் மூன்றுக்கும் சக்தி அது. அந்தப் பரம சக்தி நமது புத்தியை வெளிச்சப்படுத்தட்டும் என்பது இதன் பொருள்.
காயத்திரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்ரி-க்காகவும், நடுப்பகலில் சாவித்ரி-க்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதி-க்காகவும் ஜபிக்கப்படுகிறது. காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. மந்திர வழிபாட்டில் காயத்ரிக்குத் தான் முதல் இடம். காயத்ரி ஜபம் செய்யாத எந்த ஜபமும், ஆராதனையும் பயனற்றது.
இதை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும். சக்திகள் பெருகும். வைராக்கியம் உண்டாகும். காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள். இதை ஜபித்து வர எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும். மற்ற எல்லா மந்திரங்களுக்கும் தாய் போன்றவள் காயத்ரி. இதனை ஜெபித்தால் இந்த ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் அகலும்.
காயத்திரி மந்திரம் நன்மைகள்
காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு மனதிலும் உடலிலும் உற்சாகம் அதிகரிக்கும்.
நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். மனமும் சிந்தனையும் தெளிவடையும். இறைவனின் ஆசி கிடைக்கும்.
கோபம் நீங்கி மனம் அமைதியடையும். தீய எண்ணங்கள் நீங்கி நல்லதை மட்டுமே மனம் நினைக்கும்.
காயத்திரி மந்திரம் உச்சரிப்பதற்கான சரியான நேரம்
தினமும் குறைந்தது 108 முறை இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். ஆபத்துக் காலத்தில் 28 அல்லது 10 தடவை ஜபிக்கவும்.
காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க அதிகாலை நேரம் சிறந்தது. இந்த மந்திரத்தை சூரிய உதயத்திற்கு சற்று முன்பு உச்சரிக்க வேண்டும்.
காலையில் கிழக்கு முகமாக சூரியனைப் பார்த்து நின்று கொண்டு இரு கைகளையும் முகத்திற்கு எதிராகக் கூப்பிக் கொண்டும்,.
மதியம் கிழக்கு முகமாக உட்கார்ந்து கொண்டு கைகளை மார்புக்கு எதிரே கூப்பிக் கொண்டும், மாலையில் மேற்கு முகமாக அமர்ந்து கைகளை நாபிக்கு சமமாக கூப்பிக் கொண்டும் ஜபம் செய்ய வேண்டும்.
நம் மனதில் நினைத்த காரியம் வெற்றி பெறவும், வாழ்க்கையில் சுகமும் சந்தோஷமும் கிடைக்கவும் தினந்தோறும் காயத்ரி மந்திரத்தினை உச்சரிக்கலாம். தினசரியும் காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு அஷ்டமா சித்திகளும் கை கூடி வரும் சகல ஐஸ்வர்யங்களும் மன நிம்மதியும் கிடைக்கும் என்பதை பலரும் அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளனர்.
இதையும் படிக்கலாம் : அனைத்து தெய்வங்களுக்கும் உரிய காயத்திரி மந்திரங்கள்..!