
செஞ்சி சட்டமன்றத் தொகுதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளின் வரிசையில் 70வது தொகுதியாக செஞ்சி தொகுதி உள்ளது. இத் தொகுதி ஆரணி மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது.
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் | கட்சி |
வாக்குகள் |
1951 | அரங்கநாதன் | தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி | 16,918 |
1957 | எம். ஜங்கல் ரெட்டியார் | சுயேச்சை | 18,016 |
1962 | இராசாராம் | இந்தியத் தேசிய காங்கிரசு | 29,235 |
1967 | வி. முனுசாமி | திமுக | 39,517 |
1971 | எசு. சகாதேவ கவுண்டர் | திமுக | 39,397 |
1977 | என். இராமச்சந்திரன் | திமுக | 26,971 |
1980 | என். இராமச்சந்திரன் | திமுக | 41,708 |
1984 | டி. என். முருகானந்தம் | இந்தியத் தேசிய காங்கிரசு | 56,156 |
1989 | என். இராமச்சந்திரன் | திமுக | 38,415 |
1991 | எசு. எசு. ஆர். இராமதாசு | இந்தியத் தேசிய காங்கிரசு | 57,390 |
1996 | டி. நடராஜன் | திமுக | 51327 |
2001 | வி. ஏழுமலை | பாமக | 58564 |
2006 | வி. கண்ணன் | திமுக | 62,350 |
2011 | ஏ. கணேஷ்குமார் | பாமக | 77,026 |
2016 | கே. எஸ். மஸ்தான் | திமுக | 88,440 |
2021 | கே. எஸ். மஸ்தான் | திமுக | 1,09,625 |
வாக்காளர்களின் எண்ணிக்கை
வருடம் |
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினம் |
மொத்தம் |
2022-ன் படி | 1,26,240 | 1,30,001 | 37 | 2,56,278 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
செஞ்சி வட்டத்தின் முழுப்பகுதிகளான எடப்பட்டு, வைலாமூர் (மேல்), தேப்பிராம்பட்டு, நந்திபுரம், பருத்திபுரம், பெரியநொளம்பை, பின்னனூர், கம்மந்தாங்கல், தேவந்தாவடி, கைவிடந்தாங்கல், மோடிப்பட்டு, பெருவளூர், மரக்கோணம், மேல் நெமிலி, சின்ன நொளம்பை, எய்யில், மேல் சேவலாம்பாடி, உண்ணமாந்தல், நாரணமங்கலம், தாழன்குன்றம், பரையன்பட்டு , கப்ளாம்பாடி, கோட்டைப்பூண்டி, சங்கிலிக்குப்பம், பறையன்தாங்கல், பழம்பூண்டி, சிந்தகம்பூண்டி, கீழவம்பூண்டி, கூடுவாம்பூண்டி, பாப்பந்தாங்கல், சொக்கம்பாலம், சேவலாம்பாடி கீழ், மேல்கரணை, வடவெட்டி, அருக்கம்பூண்டி, சாத்தாம்பாடி, சிறுதலைப்பூண்டி, கொடுக்கன்குப்பம், சிந்திப்பட்டு, நொச்சலூர், குந்தலம்பட்டு, கொடம்பாடி, வடுகன்பூண்டி, கடப்பனந்தல், அவலூர்பேட்டை, கோவில்பொறையூர், தாயனூர், மேல்மலையனூர், வளத்தி, தேவனூர், கங்கபுரம், சித்தேரி, சமத்தன்குப்பம், அன்னமங்கலம், சாத்தனந்தல், கன்னலம், சாத்தப்புத்தூர், மேல்மாம்பட்டு, தொரப்பாடி, சீயப்பூண்டி, மானந்தல், மேல்புதுப்பட்டு, வடபாலை, ஈயக்குன்னம், ஏம்பலம், துரிஞ்சிப்பூண்டி, மேல்மண்ணூர், பொற்குணம், கடலி, மாவனந்தல், வணக்கம்பாடி, மேலச்சேரி, செவலப்புரை, சிறுவாடி (ஆர்.எப்), ஆலம்பூண்டி, தென்பாலை, சொக்கனந்தல், கலத்தம்பட்டு, மேல் அறங்குணம், மேல் அத்திப்பட்டு, குழப்பலூர், மேல்பாப்பம்பட்டி, செம்மேடு, வீரமநல்லூர், சத்தியமங்கலம், நயமபடி, பரதந்தாங்கல், பசுமலைத்தாங்கல், பெருங்காப்பூர், முட்டக்காடு (ஆர்.பி), சிங்கவரம், ஊரணிதாங்கல், அஞ்சாசேரி, மேல் எடபாளயம், பொன்பட்டி, ஜெயங்கொண்டம், நரசிங்கராயன்பேட்டை, கோணை, சொன்னலூர், ஒடியாத்தூர், சின்னபொன்னம்பூண்டி, மணலப்பாடி, பெரியாமூர், தேவனாம்பேட்டை, சொரத்துப் பெரியன்குப்பம், புலிப்பட்டு, புதுப்பாளையம், பாக்கம், பேட்டை (செஞ்சி), புட்டகரம், காமகரம், தாதன்குப்பம், காட்டுசித்தாமூர், மாதப்பூண்டி, கஞ்சூர், நாகலாம்பட்டு, நல்லான்பிள்ளைபெற்றாள், உளியம்பட்டு, செத்தவரை, தடாகம், போத்துவாய், பழவலம், மல்லரசன்குப்பம், மழவந்தாங்கல், கெங்கவரம், கக்கன்குப்பம், தாண்வசமுத்திரம், பாடிப்பள்ளம், தச்சம்பட்டு, அத்தியூர், சிட்டாம்பூண்டி, சிறுநாம்பூண்டி, அப்பம்பட்டு, கவரை, கடகம்பூண்டி, மீனமூர், ஜம்போதி, கோம்மேடு, தென்புதுப்பட்டு, மாவட்டம்பாடி, பாலப்பட்டு, காரை (ஆர்.எப்), காரை, வரிக்கல், மேல் அருங்குணம், முள்ளூர், தாண்டவசமுத்திரம் (ஆர்.எப்), துத்திப்பட்டு, பொன்னன்குப்பம், கோணலூர், அணையேறி, புலிவந்தி, மாத்தூர் திருக்கை, ஓட்டம்பட்டு, திருவதிக்குன்னம், மடப்பாறை கிராமங்கள் மற்றும் செஞ்சி மற்றும் அனந்தபுரம் பேரூராட்சிகள்.